விஸ்வாசம் இல்ல, பிகில்தான் ட்விட்டரில் டாப்... !

விஸ்வாசம் இல்ல, பிகில்தான் ட்விட்டரில் டாப்... !
  • Share this:
2019 ஆம் ஆண்டில் அதிகமாக பேசப்பட்ட தலைப்புகளில் முதலிடத்தில் மக்களவைத் தேர்தல் உள்ளது. அதேபோல் ஆறாவது இடத்தில் பிகில் ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது.

2019 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியவிருக்கிறது. இந்த ஆண்டை அசைபோட இணையவாசிகள் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு தீனிபோட ட்விட்டர் 2019 ஆம் ஆண்டின் டாப் 10 ஹேஷ்டேக், டாப் 10 அரசியல் பிரபலங்கள், டாப் 10 சினிமா பிரபலங்கள் என பட்டியலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக டாப் 10 ஹேஷ்டாக்கில் முதலிடத்தில் மக்களவைத் தேர்தலும், இரண்டாம் இடத்தில் சந்திரயான்2 இடம்பெற்றுள்ளன.


ஆறாவது இடத்தில் பிகில் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாக இருந்தது. இந்நிலையில் ட்விட்டரில் அதிக பேசப்பட்ட தலைப்புகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்று இருகிறது.முன்னதாக அஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் படத்தின் ஹேஷ்டேக் அதிகம் பகிரப்பட்டவையாக ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் இன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விஸ்வாசம் ஹேஷ்டேக் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
First published: December 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்