Ye Rasa: ’வாழ்க்கை ஒண்ணும் பாரமில்ல வா லேசா’ மனதை அமைதியாக்கும் யுவனின் பாடல்!

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜாவின் U1 records லேபிளில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடல், மனதை வருடும் மெல்லிய தன்னம்பிக்கை பாடலாக இடம்பெற்றுள்ளது.

  • Share this:
    விஜய் சேதுபதி நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் மாமனிதன் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

    தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகியப் படங்களை தொடர்ந்து, மீண்டும் விஜய் சேதுபதியும் சீனு ராமசாமியும் இணைந்திருக்கும் படம் ‘மாமனிதன்’. படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கிறார்கள்.



    இந்நிலையில் தற்போது இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்து இருக்கும் ‘யே.. ராசா’ என்கிற பாடல் வெளியாகி இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் U1 records லேபிளில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடல், மனதை வருடும் மெல்லிய தன்னம்பிக்கை பாடலாக இடம்பெற்றுள்ளது. புதுப்பேட்டை படத்தில் யுவனின் இசையில் இடம்பெற்ற ‘ஒரு நாளில் வாழ்க்கை’ என்ற பாடல், பலருக்கும் தன்னம்பிக்கை தரும் பாடலாக அமைந்தது. அந்த வகையில் ‘யே... ராசா’ பாடலும் ரசிகர்களுக்கு பாஸிட்டிவிட்டியை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிளாக இளையராஜா பாடிய ’தட்டிப்புட்டா’ என்ற பாடல் வெளியாகிய நிலையில், இப்போது இந்த பாடல் இரண்டாவது சிங்கிளாக வெளியாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: