ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘மிகப்பெரும் பரிசை அளித்த ரசிகர்களுக்கு நன்றி’ – யசோதா படம் குறித்து நடிகை சமந்தா உருக்கமான பதிவு…

‘மிகப்பெரும் பரிசை அளித்த ரசிகர்களுக்கு நன்றி’ – யசோதா படம் குறித்து நடிகை சமந்தா உருக்கமான பதிவு…

சமந்தா

சமந்தா

மருத்துவ முறைகேடுகளையும், வாடகைத்தாய் என்ற பெயரில் நடக்கும் குற்றங்களையும் மையப்படுத்தி யசோதா படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  யசோதா படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து நடிகை சமந்தா உருக்கமான பதிவிட்டுள்ளார்.

  சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியான யசோதா படமானது அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  ஹரி - ஹரிஷ் இயக்கத்தில் ஆக்‌ஷன்-த்ரில்லராக உருவாகியுள்ள 'யசோதா' திரைப்படத்தில் மருத்துவ உலகில் நடக்கும் முறைகேடுகளையும், வாடகைத்தாய் என்ற பெயரில் நடக்கும் குற்றங்களையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளனர்.

  மோனிகா, ஓ மை டார்லிங்கை குடும்பத்துடன் பார்க்கலாமா?

  ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். மேலும் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் என பலர் நடித்துள்ளனர். படத்தில் இடம்பெற்ற சமந்தாவின் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது.

  இந்நிலையில் யசோதா படம் வெற்றி பெற்றது குறித்து, நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கங்களில் உருக்கமான பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

  யசோதா படத்தை வெற்றி பெறச்செய்து எனக்கு மிகப்பெரும் பரிசை அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். யசோதா படத்தின்போது தியேட்டர்களில் ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடியுள்ளனர். யசோதா படக்குழு எந்த அளவுக்கு கடினமாக உழைத்தது என்பதற்கு இதுதான் சான்று.

  யசோதா படத்தில் இடம்பெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை எனக்கு கொடுத்தார். இயக்குனர்கள் ஹரி, ஹரிஷ் இருவருக்கும் நன்றி. அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.

  ’ஏன் எல்லாம் போலீசும் ஒரே மாதிரி இருக்காங்க..’ - தமிழ் சினிமாவை பங்கமாய் கலாய்த்த எழுத்தாளர்

  என்னுடன் நடித்த வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் உள்பட அனைவருக்கும் நன்றி. உங்களுடன் பணியாற்றியது அற்புதமான அனுபவத்தை கொடுத்தது. நன்றி மற்றும் பணிவன்புடன் சமந்தா.

  இவ்வாறு சமந்தா தனது பதிவில் கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actress Samantha