ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

"நான் இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்... விரைவில் குணமடைவேன்.." ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சமந்தா.!

"நான் இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்... விரைவில் குணமடைவேன்.." ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சமந்தா.!

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

நோயின் பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். விரைவில் குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். - சமந்தா

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து ரசிகர்களிடம் உருக்கமான தகவலை நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார். ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே அவரது யசோதா படத்திற்கு டப்பிங் கொடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    ட்ரிப்ஸ் ஏறும் புகைப்படத்தை  பகிர்ந்து, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘யசோதா ட்ரெய்லருக்கு ரசிகர்களாகிய நீங்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கை எனக்கு அளிக்கும் சவால்களைச் சமாளிக்க வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்னை (இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவது) இருப்பது கண்டறியப்பட்டது.

    முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும்.

    ஷாரூக்கானை தொடர்ந்து சல்மான் கானை இயக்கப் போகிறாரா அட்லீ? புதிய தகவலால் பரபரப்பு

    இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு.’ என்று கூறியுள்ளார். சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்தும், பூரண குணம் அடைய வாழ்த்து கூறியும் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.




     




    View this post on Instagram





     

    A post shared by Samantha (@samantharuthprabhuoffl)



    இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள 'யசோதா' பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    ‘இதயத்தின் இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்து’ – அதிதி ராவுக்காக உருகும் சித்தார்த்…

    வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகின்ற நிலையில் நேற்று முன்தினம் வெளியான ட்ரெய்லர் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. இந்தப் படத்தை ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளனர். மணி சர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ' isDesktop="true" id="827211" youtubeid="7rsRx_VtlQU" category="cinema">

    சைன்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் ஜானரில் யசோதா படம் உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு நடிகை சமந்தா டப்பிங் பேசியுள்ளார். இதுதொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actress Samantha