• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சாண்டி, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா டான்ஸ் ... ட்ரெண்டாகும் பழைய வீடியோ..

சாண்டி, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா டான்ஸ் ... ட்ரெண்டாகும் பழைய வீடியோ..

சாண்டி, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா டான்ஸ்

சாண்டி, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா டான்ஸ்

நடன இயக்குனர் சாண்டி, நடிகை யாஷிகா ஆனந்த், நடிகை ஐஸ்வர்யா நடனம் ஆடிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர்  நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் 21 வயதான நடிகை யாஷிகாஆனந்த்.

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவரது பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் நடன இயக்குனர் சாண்டி, நடிகை யாஷிகா ஆனந்த், நடிகை ஐஸ்வர்யா நடனம் ஆடி உள்ளனர்.

    உன் முகத்தை மேக் அப் இல்லாமல் பார்க்க முடியவில்லை யாஷிகா என தொடங்கும் பாடலுக்கு மூவரும் நடனமாடும் வீடியோ யூடியூபில் பலரின் கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோ இதுவரை 18,419,484 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

     



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா படுகாயமடைந்தார். அவரது இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர் சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் யாஷிகாவுக்கு நெருங்கிய தோழியான ஐஸ்வர்யா தத்தா, மருத்துவமனைக்கு சென்று யாஷிகாவை நேரில் பார்த்துள்ளார். அவரது உடல் நிலை குறித்து குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடமும் விசாரித்துள்ளார்.இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ஐஸ்வர்யா, ”என்னுடைய தோழி நலமாக இருக்கிறார். விரைவில் நலம்பெற்று விடுவார். அவருடைய மன உறுதி திடமாக உள்ளது” என பதிவிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: