யாஷிகா ஆனந்த் தான் கதறி அழும் வீடியோவை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. தனது 14 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ் படங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடித்துள்ளார். குறிப்பாக, அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார் யாஷிகா. சூளேரிக்காடு அருகே வரும்போது, அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளாது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விஜய் - ஜோதிகாவின் குஷி வெளியாகி இன்றோடு 22 ஆண்டுகள்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து, அறுவை சிகிச்சை, மருத்துவமனை என நீண்ட காலம் ஓய்வில் இருந்தார் யாஷிகா ஆனந்த். இதற்கிடையே, சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவிடுவதையும், ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
View this post on Instagram
இந்நிலையில் தற்போது தான் கதறி அழும் வீடியோ ஒன்றை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அது ரீல்ஸ் வீடியோ என தெரிய வந்திருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Cinema, Yashika Anand