’என் வலிமை இவர்கள் தான்...’ யாஷிகா ஆனந்த் வெளியிட்ட படம்!

யாஷிகா ஆனந்த்

தன்னால் சில மாதங்களுக்கு எழுந்து நடக்க முடியாது எனக் கூறியிருந்த யாஷிகா, படுக்கையிலேயே தான் ஓய்வெடுத்து வருவதாகக் கூறினார்

 • Share this:
  நடிகை யாஷிகா ஆனந்த் தனது புதிய படத்தைப் பகிர்ந்துள்ளார்.

  கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.

  இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார் யாஷிகா. சூளேரிக்காடு அருகே வரும்போது, அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளாது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  இதையடுத்து தன்னால் சில மாதங்களுக்கு எழுந்து நடக்க முடியாது எனக் கூறியிருந்த யாஷிகா, படுக்கையிலேயே தான் ஓய்வெடுத்து வருவதாகக் கூறினார். இந்நிலையில் தனது சமீபத்திய புகைப்படத்தைப் பகிர்ந்த யாஷிகா, ‘என்னுடைய வலிமை’ எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில் யாஷிகாவின் அம்மாவும், அவரது செல்லப்பிராணியும் இடம்பெற்றுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: