Home /News /entertainment /

Yashika Anand: 5 மாதம் நிற்கவே முடியாது... படுக்கையிலேயே இயற்கை உபாதைகள் - யாஷிகாவின் தற்போதைய நிலை

Yashika Anand: 5 மாதம் நிற்கவே முடியாது... படுக்கையிலேயே இயற்கை உபாதைகள் - யாஷிகாவின் தற்போதைய நிலை

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான்.

    கார் விபத்துக்குப் பிறகு முதன் முறையாக தனது உடல்நிலை குறித்த அப்டேட்டை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் நடிகை யாஷிகா. அந்நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிக்கும் நடுவராக இருந்தார். நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி, அந்தப் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

    இந்நிலையில் கடந்த வாரம் புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார் யாஷிகா. சூளேரிக்காடு அருகே வரும்போது, அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த விபத்தில் பலத்த காயமடைந்த யாஷிகா, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தனது உடல்நிலை குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ”இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது. ஆனால் நல்லவேளை முகத்திற்கு எதுவும் ஆகவில்லை. நிச்சயமாக இது எனது மறுபிறப்பு தான். கடவுள் என்னை தண்டித்து விட்டார். ஆனால் நான் இழந்ததை ஒப்பிடுகையில், இது ஒன்றுமே இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Yashika Anand

    அடுத்த செய்தி