• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Yashika Anand: 'வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன்' யாஷிகா ஆனந்தின் உணர்ச்சிப் பதிவு

Yashika Anand: 'வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன்' யாஷிகா ஆனந்தின் உணர்ச்சிப் பதிவு

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து காப்பாற்றியதற்காக, கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை நொந்துக் கொள்வதா எனத்  தெரியவில்லை.

  • Share this:
    கார் விபத்துக்குப் பிறகு முதன் முதலாக உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

    தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். கடந்த வாரம் புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். சூளேரிக்காடு அருகே வரும்போது, அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளாது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விவகாரத்தில் யாஷிகா மீது அதிவேகமாக காரை ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தியது என்று மூன்று பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தோழியின் மரணம் குறித்து உருக்கமான செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார் யாஷிகா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.




    அதில், “நான் இப்போது என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியவில்லை. நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன். இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து காப்பாற்றியதற்காக, கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை நொந்துக் கொள்வதா எனத்  தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் நான் பவானியை மிஸ் செய்வேன். நீ என்னை மன்னிக்க மாட்டாய் என தெரியும். என்னை மன்னித்துவிடு. உன்னுடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

    அதோடு தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் எனவும் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: