• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • படுக்கையிலே 3 மாதம் வாழ்நாள் போராட்டம்.. முதல் அடி எடுத்து மீண்டும் வரும் யாஷிகா ஆனந்த்!

படுக்கையிலே 3 மாதம் வாழ்நாள் போராட்டம்.. முதல் அடி எடுத்து மீண்டும் வரும் யாஷிகா ஆனந்த்!

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த யாஷிகா உடல் நலம் தேறி தற்போது மருத்துவர்களுடன் நடக்க பயிற்சி எடுத்து வருகிறார்.

  • Share this:
    கிட்டத்தட்ட 95 நாட்கள் படுக்கை போராட்டத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் டாக்டர்கள் துணையுடன் நடக்க பழகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இளம் நடிகைகள் லிஸ்டில் யாஷிகா ஆனந்த்-க்கு நிச்சயம் இடம் உண்டு. வெள்ளித்திரையில் ஜொலித்த பிறகு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. கூடவே சர்ச்சைகளும் அதிகரித்தது. பிக் பாஸ் வீட்டில் இவருக்கும் நடிகர் மகத்-க்கும் இடையேயான காதல் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. சமூகவலைத்தளங்களில் யாஷிகா குறித்து ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்களும் உலா வந்தன. ஆனால் அவர் வீட்டில் இருந்து வந்த பிறகு அந்த விமர்சனங்களே அவருக்கு புரமோஷன் ஆகி நிறைய பட வாய்ப்புகளை வாங்கி தந்தன.

    அடுத்தடுத்த  படங்களில் கமிட் ஆனார். பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போது தான் 3 மாதங்களுக்கு முன்பு நடிகை யாஷிகா சென்ற கார் விபத்தில் சிக்கியது. புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார் யாஷிகா. சூளேரிக்காடு அருகே வரும்போது, அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளாது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் யாஷிகாவுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் பிழைத்தார். இருப்பினும் அவரால் 3 மாதங்களுக்கு எழுந்து நடக்க முடியாது படுக்கையிலே ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை மிகுந்த வேதனையுடன் யாஷிகா தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த யாஷிகா உடல் நலம் தேறி தற்போது மருத்துவர்களுடன் நடக்க பயிற்சி எடுத்து வருகிறார்.



    படுக்கையிலே 3 மாதங்கள் வாழ்நாள் போராட்டத்திற்கு பிறகு யாஷிகா, முதல் அடி எடுத்து வைக்கும் வீடியோ அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மிகப் பெரிய விபத்தில் இருந்து மீண்டு வந்து தன்னம்பிக்கையுடன் இருக்கும் யாஷிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர். அதுமட்டுமில்லை இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. யாஷிகாவின் நண்பர்களும் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் கொடுத்து தங்கள் பாராட்டுக்கள், வாழ்த்துக்களை யாஷிகாவுக்கு கூறி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: