'தல அஜித் கூட நடிக்க மிகவும் ஆசை' - நேரலையில் சான்ஸ் கேட்ட யாஷிகா ஆனந்த்

டிவிட்டர் நேரலையில் பங்கேற்ற யாஷிகா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

'தல அஜித் கூட நடிக்க மிகவும் ஆசை' - நேரலையில் சான்ஸ் கேட்ட யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த் - அஜித் குமார்
  • News18
  • Last Updated: May 26, 2019, 10:07 PM IST
  • Share this:
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரேவாக வலம் வருபவர் அஜித் குமார். உங்களுக்கு யாருடன் நடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பல ஹீரோயின்கள் கை காட்டுவது அஜித்தாக தான் இருக்கும். அந்த பட்டியலில் தற்போது யாஷிகா ஆனந்தும் இணைந்துள்ளார்.

ஜீவா - காஜல் அகர்வால் நடித்த 'கவலை வேண்டாம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருட்டு அறைக்குள் முரட்டு குத்து படத்தின் மூலமாக யாஷிகா ஆனந்த் மிகவும் பிரபலமானார்.

இதையடுத்து 2018-ம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் 2-வது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்தார் யாஷிகா ஆனந்த். அதே சீசனில் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தாவுடன் சேர்ந்த் பார்ட்டிக்கு செல்வது, புகைப்படம் எடுப்பது, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


Also Read : Video: ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் யாஷிகா ஆனந்த்

தற்போது யாஷிகா ஆனந்த் யோகி பாபு உடன் 'ஜாம்பி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் மஹத்துடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் டிவிட்டர் நேரலையில் பங்கேற்ற யாஷிகா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். ஜாம்பி படம் பற்றியும், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பல கேள்விகளுக்கு யாஷிகா ஆனந்த் பதில் அளித்தார்.


அப்போது தல அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு, எனக்கும் அவருடன் நடிக்க ஆசையாக தான் உள்ளது. நீங்கள் எல்லாம் அவரிடம் கொஞ்சம் எடுத்து சொல்லுங்கள். அப்போதாவது எனக்கு அவருடன் நடிக்க வாய்ப்பு தருகிறார்களா என்று பார்ப்போம் என்று பதிலளித்தார்.

Also Read : நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் – வெளியானது அல்டிமேட் அப்டேட்!

Also Watch : தன்னிகரில்லா தல - அஜித் அறிமுகப்படுத்திய முன்னணி இயக்குநர்கள்!

First published: May 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்