Home /News /entertainment /

கே.ஜி.எஃப். 2 உடன் மோதும் அமீர் கான் படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கே.ஜி.எஃப். 2 உடன் மோதும் அமீர் கான் படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்யின் பீஸ்ட் படமும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படமும் 14-ம்தேதி வெளியானால், இந்திய சினிமாவில் மிகப்பெரும் போட்டியாக ஏப்ரல் 14 மற்றும் அதற்கடுத்த வார நாட்கள் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கே.ஜி.எஃப். 2 படத்துடன், அமீர் கானின் படம் மோதவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கே.ஜி.எஃப். பாகம் 1 கடந்த 2018 டிசம்பரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கே.ஜி.எஃப். என்ற பெயரிலேயே படம் வெளியிடப்பட்டது. Kolar Gold Field - கோலார் தங்க சுரங்கம் என்பதன் சுருக்கமாக கே.ஜி.எஃப். அழைக்கப்படுகிறது.

    கன்னட மொழியில் உருவாக்கப்பட்டாலும், இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பிரமாண்ட பின்னணி இசையாலும், ஒவ்வொரு மொழிக்கும் ஏற்ற வசனங்களாலும் படம் பெரும் வெற்றியை பெற்றது. ஒவ்வொரு காட்சியையும், மாஸ்ஸாக செதுக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்கியுள்ளார்.

    கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய கே.ஜி.எஃப். சாப்டர் 2 திரைப்படம் கொரோனா பிரச்னைகள் காரணமாக ஏப்ரல் 14-ம்தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே நாளன்று, பிரபல இந்தி நடிகர் அமீர் கானின் லால் சிங் சட்டா என்ற திரைப்படமும் வெளியாகவுள்ளது.

    இதையும் படிங்க : Jai Bhim: ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம்!

    இதுதொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டாலும், கொரோனா பிரச்னைகள் காரணமாக வெளியீடு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏதும் இல்லை என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய்யின் பீஸ்ட் படமும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த படமும் 14-ம்தேதி வெளியானால், இந்திய சினிமாவில் மிகப்பெரும் போட்டியாக ஏப்ரல் 14 மற்றும் அதற்கடுத்த வார நாட்கள் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    இதையும் படிங்க : சிக்கியது ஆதாரம்.. தமிழ் - சரஸ்வதி கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்லை!
    Published by:Musthak
    First published:

    Tags: Aamir Khan

    அடுத்த செய்தி