திட்டமிட்டதைவிட அதிக திரையரங்குகளில் வெளியாகி உள்ள கே ஜி எஃப் திரைப்படத்தில் இரண்டாவது பாகம் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாவது பாகம், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ளது. கருடன் எனும் வில்லன் கதாபாத்திரம் இறந்ததற்கு பிறகு கேஜிஎப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெறும் அதிகாரப்போட்டிகளையும், அதன் பின் யாஷ் நடத்தும் அதிரடிகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், முழுக்க முழுக்க மாஸ் மசாலா விருந்தாக அமைந்துள்ளது.
முதல் பாகத்தை காட்டிலும் கூடுதல் பிரம்மாண்டம் சேர்க்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு அனைத்து மொழிகளிலும் விருந்தாக அமைந்துள்ளது. சஞ்சய் தத் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பங்களிப்பு, முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகத்தை இன்னும் மனதிற்கு நெருக்கமாக அழைத்து வருகிறது. ரசிகர்களுக்கு மயிர்க்கூச்செறியும் உணர்வினை காட்சிக்கு காட்சி வழங்க வேண்டுமென திட்டமிட்டு அதற்கான உழைப்பை பழக்குழுவினர் கொட்ட எடுத்துக்கொண்ட முயற்சிக்கு, திரையரங்குகளில் நல்ல பலன் கிடைத்துள்ளது. படத்தின் பின்னணி இசையால் இந்த முறையும் ரசிகர்களின் மன ஆழத்தை அளந்து பார்த்துள்ளார் ரவி பஸ்ரூர், மேலும் சண்டைக்காட்சிகளில் இரட்டையர்கள் அன்பறிவின் உழைப்பிற்கு இந்த முறையும் தேசிய விருது வழங்கப்படலாம் என தோன்ற செய்கிறது.
பீஸ்ட் ரசிகர்கள் காட்சிக்கே ஆள் இல்லாமல் காற்று வாங்கிய திரையரங்கம்
சண்டைக்காட்சிகளில் மாஸ் காட்சிகளில் செலுத்தி இருக்கும் கவனத்தை சென்டிமென்டிலும் செலுத்தி இருப்பதால் இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்களையும் கவரும் என்ற நிலையை எட்டியுள்ளது. படத்தின் இறுதி காட்சி அனைவரது மனதையும் தொடும் நிகழ்வாக அமைந்துள்ளதால், கேஜிஎப் திரைப்படம் ஒட்டுமொத்தமாக ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவமாக அமைந்துள்ளது.
சென்னையில் ஊழியர்களுக்கு விடுமுறையுடன் பீஸ்ட் டிக்கெட் பரிசளித்த ஐ.டி நிறுவனம்!
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இன்று திட்டமிட்டதைவிட ஏறத்தாழ 50 லிருந்து 100 அரங்குகளில் கேஜிஎப் திரைப்படம் அதிகமாக வெளியானது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை காட்டிலும் இந்த திரைப்படத்திற்கு ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், அந்தப் படத்தின் வர்த்தகத்தில் பெரும் பின்னடைவை கேஜிஎப் திரைப்படம் ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.