முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கேஜிஎஃப் சேப்டர் 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

கேஜிஎஃப் சேப்டர் 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

கே.ஜி.எஃப்

கே.ஜி.எஃப்

இரண்டாவது பாகமான கேஜிஎஃப் சேப்டர் 2 தயாராகி பல மாதங்களாகிறது.

  • Last Updated :

கேஜிஎஃப் சேப்டர் 2 பட வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்ற இரு பிரமாண்ட வணிகப்படங்கள் பாகுபலி மற்றும் கேஜிஎஃப். பாகுபலி தெலுங்கில் தயாரானது என்றால், கேஜிஎஃப் கன்னடத்தில். கன்னடத்தில் தயாரான ஒரு படம் தேசிய அளவில் வரவேற்பை பெற்றது இதுவே முதல்முறை. மேலும், கன்னட திரைவரலாற்றில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. யாஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

பாகுபலி போலவே கேஜிஎஃப் படமும் இரு பாகங்களாக தயாரானது. இரண்டாவது பாகமான கேஜிஎஃப் சேப்டர் 2 தயாராகி பல மாதங்களாகிறது. படத்தின் டீஸர் வெளியாகி பார்வையாளர்கள் எண்ணிக்கையில் இந்திய அளவில் சாதனையும் படைத்தது. படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் படவெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேஜிஎஃப் சேப்டர் 2 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இது வெளியிடப்படுகிறது. கேஜிஎஃப் சேப்டர் 1 இன் வெற்றிக்கு அதில் இடம்பெற்றிருந்த வில்லன் கதாபாத்திரம் முக்கிய காரணம். இரண்டாவது பாகத்தில் சஞ்சய் தத் வில்லன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஏற்கனவே அவரது வில்லன் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: