ஒரு இயக்குநரின் தன்மானத்தோடு... முடிவுக்கு வந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டீசர் சர்ச்சை

ஒரு இயக்குநரின் தன்மானத்தோடு... முடிவுக்கு வந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டீசர் சர்ச்சை

விஜய் சேதுபதியுடன் இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த்

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் டீசர்’ சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது.

  • Share this:
பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், இயக்குநர் மோகன்ராஜா, ரித்திகா, கரு.பழனியப்பன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் டீசர் மார்ச் 4-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் டீசர் வெளியிடப்பட்டது தனக்கு தெரியாது என்றும் தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தற்போது அந்த சர்ச்சைக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருக்கும் வெங்கட கிருஷ்ண ரோகாந்த், “அன்பார்ந்த நண்பர்களுக்கு, முந்தைய பதிவில் யாதும் ஊரே யாவரும்கேளிர் டீசர் வெளியானதை தொடர்ந்து என் மனவருத்தத்தையும், தயரிப்பு தரப்பு கொடுக்கும் விளக்கத்தை அறிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தேன்.

அதைத்தொடர்ந்து நான் பதிவிட்ட மறுநாளில் இருந்து என் முகநூல் பக்கத்தை பார்க்க முடியவில்லை என்று சிலர் கூற ஆரப்பித்தார்கள். மறு நாள் இந்த எண்ணிக்கை கூடியது. அடுத்த நாள் என்னாலும் என் முக நூல் பக்கத்துக்குள் நுழைய முடியவில்லை. வெங்கட கிருஷ்ண ரோகாந்த் பெயரிலான கணக்கு முடக்கப்பட்டதாக காட்டியது.

அதன் பின் நீண்ட நேர போராட்டத்திற்கு என முகநூல் பக்கம் மீட்கப்பட்டது.ஆனால் அதில் எனது கடைசி பதிவான யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர் பதிவு நீக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய எனது பதிவான ஜனா சாரின் லாபம் ட்ரைலர் தான் எனது கடைசி அக்டிவிட்டியாக முகநூல் காட்டியது. என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க பெரிய துப்பறியும் அறிவு ஒன்றும் தேவைப்படாது தான். இருந்தாலும் ஊகங்களின் பின்னால் நான் செல்ல தயாரகயில்லை. அமைதியாக இருந்தேன். நேற்று, இந்த படம் உருவாக்கத்தில் இருந்து இன்று வரை இந்த ப்ராஜக்டின் முக்கிய காரணியாக இருக்கும் குமார் சார் போனில் பேசினார்.



சில அறிவுரைகள்... சில தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள்... அடுத்த செயல் திட்டங்கள் என்று எங்கள் உரையாடல் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத்தொடங்கி இருக்கிறது. சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ஆலுவலகம் செல்லப்போகிறேன்.
நல்லது. இனி நான் பேசப் போகும் விஷயம் தான் ரொம்ப முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

நான் அடிப்படையில் இயக்குநர் சங்க உறுப்பினர் இல்லை. பேராண்மையின் போது ஜனா சார் தற்காலிக உறுப்பினராக என்னை சேர்த்துவிட்ட போதும் அதை தொடராமல் விட்டதால் நான் இன்று இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர் இல்லை.
அதனாலயே தவிர்க்க முடியாமல் இந்த விஷயத்தை பொதுவெளிக்கு கொண்டு வரும்படியாகிவிட்டது. இது முற்றிலும் ஒரு தவறான முன்னுதாரனம் என்பதை திரைத்துறை முன்னால் ஒப்புக்கொள்கிறேன்.

என் படத்து டீசரை என் முகநூல் பக்கத்தில் வெளியிட முடியாமலே போய்விடுமோ என்கிற மன உளைச்சல் இருந்தது...
இன்று நிலைமை மாறி இருக்கிறது. 20 லடசத்தை தாண்டிய பார்வையாளர்கள், பாராட்டுகள், கருத்துகள், எதிர்கருத்துகள் என்று முன்னேறி போய் கொண்டிருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசரை எனது முக நூல் பக்கத்தில் பதிவிடுகிறேன்.
தாமதமாக இந்த டீசர் பதிவிடப்படுகிறது என்றாலும் ஒரு இயக்குநரின் தன்மானத்தோடு பதிவிடப்படுகிறது” இவ்வாறு இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: