Home /News /entertainment /

‘இந்தி பட இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்’ – அருண் விஜய் பேட்டி

‘இந்தி பட இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்’ – அருண் விஜய் பேட்டி

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்

Yaanai Arun Vijay : ஏற்கனவே வெளியான ஹரி படங்களிலிருந்து மாறுபட்டு அதேநேரம் ஃபேமிலி ஆடியன்ஸ் மற்றும் சினிமா ரசிகர்களை திருப்திபடுத்தும் படமாக யானை அமையும்

    இந்திப்பட இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக நடிகர் அருண்விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் யானை என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி இயக்குனர் ஹரியும், நடிகர் அருண் விஜய்யும் படத்திற்கான புரொமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே வெளியான ஹரி படங்களிலிருந்து மாறுபட்டு அதேநேரம் ஃபேமிலி ஆடியன்ஸ் மற்றும் சினிமா ரசிகர்களை திருப்திபடுத்தும் படமாக யானை அமையும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். யானை படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

    இதையும் படிங்க - ‘பள்ளிகளில் ஒழுக்க நெறிமுறை வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும்’ - இயக்குனர் எஸ்பி முத்துராமன் வலியுறுத்தல்... 

    வில்லனாக கேஜிஎஃப் படத்தில் வில்லனாக கருடனாக நடித்த ராமலிங்க ராஜு நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹரி இந்த படத்தை இயக்கி இருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

    இந்நிலையில் யானை படத்தின் புரொமோஷன் குறித்து செய்தியாளர்களுக்கு அருண் விஜய் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    பிரபாஸ் ஹீரோவாக நடித்த சாஹோ படத்தில் நான் இடம்பெற்றேன். எனது கேரக்டர் பாலிவுட் ரசிகர்களால் விரும்பப்பட்டது. பாலிவுட்டில் நடிப்பதற்கு விரும்புகிறேன்.

    இதையும் படிங்க - ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு 

    குறிப்பாக சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி, ரோகித் ஷெட்டி ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க எனக்கு விருப்பமாக உள்ளது. இவர்கள் இயக்கிய அனைத்து படங்களையும் நான் பார்த்து விட்டேன்.

    இந்த இயக்குனர்களிடம் சிறப்பான கதையம்சம் இருக்கிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்றினால் இன்னும் சிறப்பான படைப்புகளை இந்திய ரசிகர்களுக்காக அளிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    யானை, பார்டர், அக்னி சிறகுகள் மற்றும் சினம் ஆகிய படங்களில் அருண்விஜய் நடித்து முடித்துள்ளார். இதில் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Arun Vijay

    அடுத்த செய்தி