Home /News /entertainment /

எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக கே. பாக்யராஜ் மீண்டும் தேர்வு…

எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக கே. பாக்யராஜ் மீண்டும் தேர்வு…

கே. பாக்யராஜ்

கே. பாக்யராஜ்

40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக கே.பாக்யராஜ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக கே.பாக்யராஜ் பதவி வகித்தார். அந்த சமயத்தில் சர்கார்,  கோமாளி உள்ளிட்ட பல படங்களின் கதை தொடர்பான பிரச்சினைகளில் அவர் திறம்பட செயல்பட்டார் என பலரும் பாராட்டினர்.

குறிப்பாக சர்கார் திரைப்பட கதை சர்ச்சையில் உதவி இயக்குனர் பக்கம் நின்றார் கே.பாக்யராஜ். அந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வரை சென்று உதவி இயக்குனருக்கு உறுதுணையாக இருந்தார். இந்த நிலையில் கே.பாக்யராஜின் செயல்பாடுகள் குறித்து சங்கத்தில் சர்ச்சைகள் வெடித்தன.

வெற்றிமாறனின் விடுதலை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியீடு…

அதே சமயம் கே.பாக்யராஜ் பதவியில் இருந்து விலகுவதாக கூறினார்.  ஆனால் அவருடன் பதவி வகித்தவர்கள் கே.பாக்யராஜ் தலைவராக தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  அதன் காரணமாக தன்னுடைய முடிவை திரும்ப பெற்றார்.

இதையடுத்து சமீபத்தில் மீண்டும் எழுத்தாளர்கள் சங்கத்தில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. அதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

பாலிவுட்டிற்கு நம்பிக்கையூட்டும் பிரமாஸ்திரா படத்தின் வசூல்…

அதில் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ் தேர்வாகியுள்ளார். அவர்  192 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளும் பெற்றனர்.

இதன் காரணமாக 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மற்ற பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அந்த வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Published by:Musthak
First published:

Tags: Kollywood

அடுத்த செய்தி