Home /News /entertainment /

‘எழுத்தாளர் சங்க தேர்தலில் எதிர் அணியினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்’ – கே. பாக்யராஜ் குற்றச்சாட்டு…

‘எழுத்தாளர் சங்க தேர்தலில் எதிர் அணியினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்’ – கே. பாக்யராஜ் குற்றச்சாட்டு…

கே. பாக்யராஜ்

கே. பாக்யராஜ்

வரும் 11-ம் தேதி நடைபெறும் எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் பாக்யராஜ் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டுயிடுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
யோகி பாபு நடித்துள்ள ஷூ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது-

கொரியன் மற்றும் ஆங்கில படங்களில் சிறுவயது குழந்தைகளை கடத்திச் சென்று வியாபாரம் செய்வது போன்ற படங்கள் நிறைய வந்துள்ளன. அந்தப் படங்கள் போல மக்களுக்கு மெசேஜ் கொடுக்கும் வகையில் ஷூ கதை இருக்கிறது.

வரும் 11-ம் தேதி நடக்கும் உள்ள எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடும் எதிர் அணியினர், நான் சொல்லாததை சொன்னதாக தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். எழுத்தாளர் சங்கத்திற்கு நான் என்ன செய்தேன் என்பதற்கு அத்தாட்சி ஒன்றுதான் உள்ளது.  அது என்னுடைய மனசாட்சி. அதை தவிர வேறு ஏதும் கிடையாது.

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு…

தேர்தல் நடத்தலாம் என்று கூறிய போதெல்லாம் தற்போது எதிரணியில் இருப்பவர்கள்தான் தேர்தல் வேண்டாம்.  நீங்களே தலைவராக இருங்கள் என என்னிடம் தெரிவித்தார்கள்.  அத்துடன் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் வரை சென்று கதை ஆசிரியருக்கு வெற்றி பெற்று கொடுத்தவன்.  அத்துடன் பத்திரிக்கையாளர்களை அழைத்தும் அதை சொன்னேன்.

அதேசமயம் அந்த வழக்கு முடிந்தவுடன் பதவியை ராஜினாமா செய்கிறேன், மீண்டும் தேர்தல் நடத்தி வெற்றி பெற்றுக் கொள்கிறேன் என கூறினேன். ஆனால் நான் ராஜினாமா செய்தால் அனைவரும் ராஜினாமா செய்வோம் என்று கூறினார்கள்.  அதுமட்டுமில்லாமல் மீண்டும் சில பிரச்னைகள் வந்த போதும் தேர்தல் நடத்தலாம் என்று கூறினேன். அப்போதும் தேர்தல் வேண்டாம் என்று கூறினார்கள்.  ஆனால் நான்தான் தேர்தல் நடத்த வேண்டாம் என்று கூறியதாகவும், நான் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என்றும் தற்போது தவறான பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.

ஜாதி ரீதியிலான படங்கள் என்பவை இயக்குனர்களின் படைப்பு சுதந்திரம் சார்ந்தது – நடிகர் ஆர்யா விளக்கம்

இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார். வரும் 11-ம் தேதி நடைபெறும் எழுத்தாளர்கள் சங்க  தேர்தலில் பாக்யராஜ் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டுயிடுகின்றனர்.
Published by:Musthak
First published:

Tags: Kollywood

அடுத்த செய்தி