Home /News /entertainment /

திரைப்படமாக மாறும் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதை!

திரைப்படமாக மாறும் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதை!

ஜெயமோகன்

ஜெயமோகன்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அர்விந்த் ஆஹா என்ற ஓ.டி.டி தளத்தை நடத்தி வருகிறார். இந்த தளம் தற்போது தமிழிலும் திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. அத்துடன் நேரடி இணையத் தொடர்களையும் தயாரித்து தங்கள் தளத்தில் வெளியிடுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஜெயமோகன் எழுதிய வெண்கடல் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கைதிகள் சிறுகதையை திரைப்படமாக உருவாக்குகின்றனர். 

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அர்விந்த் ஆஹா என்ற ஓ.டி.டி தளத்தை நடத்தி வருகிறார். இந்த தளம் தற்போது தமிழிலும் திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. அத்துடன் நேரடி இணையத் தொடர்களையும் தயாரித்து தங்கள் தளத்தில் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் அல்லு அரவிந்த் மற்றும் விஜய் டிவி மகேந்திரனின் டெர்மரிக் மீடியா புதிய திரைப்படங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். அதில் முதல் கதையாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்கடல் என்ற சிறுகதைர் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் 'கைதிகள்' என்ற சிறுகதையை தழுவி புதிய படத்தை எடுக்க உள்ளனர்.

Also read... பொன்னியின் செல்வன் நாவலை நான் படிக்க ஜெயலலிதாதான் காரணம் - ரஜினிகாந்த்

அந்த படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். சிறந்த இலக்கிய படைப்புகள் வெற்றிகரமான திரைப்படங்களாகவும் ரசனைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதற்காக ஜெயமோகன் எழுதிய மூலக்கதைக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் திரைக்கதை அமைக்க மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Jeyamohan

அடுத்த செய்தி