Home /News /entertainment /

கள்ளன் டைட்டிலை மாற்ற இயக்குனருக்கு மிரட்டல்...!

கள்ளன் டைட்டிலை மாற்ற இயக்குனருக்கு மிரட்டல்...!

கள்ளன்

கள்ளன்

கள்ளன் 80 களின் இறுதியில் நடக்கும் கதை. இதில் நாயகனாக இயக்குனர் கரு.பழனியப்பனும், நாயகியாக தோழா படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்த நிகிதாவும் நடித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கியிருக்கும் கள்ளன் படத்தின் டைட்டிலை மாற்ற அவருக்கும் தயாரிப்பாளர் மற்றும் நாயகனாக நடித்த கரு.பழனியப்பனுக்கும் மிரட்டல்கள் விடப்பட்டுள்ளது.

பல வருடங்களுக்கு முன் சந்திரா தங்கராரி தொடங்கிய படம் கள்ளன். இந்தப் படத்தின் பெயரை அறிவித்த போது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையும் மீறி முழுப்படமும் தயாரானது. ஆனாலும், படம் திரைக்கு வராமல் இழுத்துக் கொண்டே சென்றது. இந்நிலையில், கள்ளன் 2022 ஜனவரியில் வெளியாகும் என அறிவித்து, படத்தின் டீஸரையும் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் சந்திரா தங்கராஜ், "இந்தப் படத்துக்கு இப்படியான டைட்டில்தான் பொருத்தமாக இருக்கும். இது எந்த சாதியையும் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அல்ல. வேட்டை சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன் வேட்டை கூடாது என தடை செய்யப்பட்ட பின் வறுமையின் காரணமாக ஒரேயொருமுறை தவறு செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகிறான். அது அவனுடைய வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் படத்தின் கதை. வேட்டை சமூகம் என்பது எல்லா ஊர்களிலும் இருப்பதுதான்" என்றார்.



கள்ளன் 80 களின் இறுதியில் நடக்கும் கதை. இதில் நாயகனாக இயக்குனர் கரு.பழனியப்பனும், நாயகியாக தோழா படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்த நிகிதாவும் நடித்துள்ளனர். கே இசையமைக்க, எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Also read... ஹிப் ஹாப் ஆதி படம் - விழித்துக் கொண்ட சத்யஜோதி ஃபிலிம்ஸ்!

கள்ளன் என்ற பெயரை மாற்ற வேண்டும் என குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இயக்குனர், படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர்கள் மதியழகன், எஸ்.வி.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களிடம், கள்ளன் படத்தில் சாதீய குறியூடோ, வசனமோ இருக்காது என்று உறுதியளித்துள்ளார் சந்திரா. அதையும் மீறி பிரச்சனை செய்கிறவர்கள் படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி