முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' - வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்

எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' - வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்

வடக்கன் படப்பிடிப்பு தளத்தில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், இயக்குநர் பாஸ்கர் சக்தி, இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் வேடியப்பன்

வடக்கன் படப்பிடிப்பு தளத்தில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், இயக்குநர் பாஸ்கர் சக்தி, இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் வேடியப்பன்

இந்தப் படம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாவதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எம்டன் மகன், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி. வடக்கன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பாக வேடியப்பன் தயாரிக்கிறார். தேனி ஈஸ்வர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். குங்குமராஜ் மற்றும் வைரமாலா இருவரும் இந்தப் படத்தின் நாயகன் நாயகிகளாக அறிமுகமாகின்றனர்.

கர்நாடக இசைக்கலைஞர் எஸ்.ஜெ.ஜனனி இந்தப் படத்துக்கு இசையமைக்க ரமேஷ் வைத்யா பாடல்கள் எழுதுகிறார். இந்தப் படம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாவதாக கூறப்படுகிறது.

First published:

Tags: First look