தர்ஷன், அர்ஜூன், சினேகா என நட்சத்திர பட்டாளமே இணைந்த குருக்ஷேத்ரம் 3டி பட ட்ரைலர் இதோ..!

தர்ஷன், அர்ஜூன் சினேகா என நட்சத்திர பட்டாளமே இணைந்த குருக்ஷேத்ரம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

news18
Updated: July 29, 2019, 11:13 AM IST
தர்ஷன், அர்ஜூன், சினேகா என நட்சத்திர பட்டாளமே இணைந்த குருக்ஷேத்ரம் 3டி பட ட்ரைலர் இதோ..!
குருக்ஷேத்ரம்
news18
Updated: July 29, 2019, 11:13 AM IST
குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும் "குருக்ஷேத்ரம்" பிரமாண்ட படத்தை வெளியிடுகிறது கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ்.

மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதம் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும். இந்த காவியத்தின் குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் 'குருக்ஷேத்ரம்'.

உலகளவில் 3D முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு , ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படத்தை நாகண்ணா இயக்கியுள்ளார்.
பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு முனி ரத்னா கதை எழுதியுள்ளார். ஐெய் வின்சென்ட் ஒளிப்பதிவும், ஜோ. நி. ஹர்ஷா எடிட்டிங்கும் கையாண்டுள்ளனர. இந்த மாபெரும் இதிகாசத் திரைப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தை வெளியிடும் உரிமையை கலைப்புலி S தாணு வழங்கும் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனனாக தர்ஷன், கர்ணனாக அர்ஜுன், சகுனியாக ரவிசங்கர், கிருஷ்ணராக ரவிச்சந்தரன், அர்ஜுனன் ஆக சோனு சூட், சகுனி ஆக ரவி ஷங்கர், திரௌபதி ஆக ஸ்நேகா என நட்சத்திர பட்டாளமே இப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

Also watch

First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...