முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘பொன்னியின் செல்வன்படத்திற்கு பின்னர் தமிழர் வரலாற்றை உலகம் அறியும்’ – ஜெயமோகன்

‘பொன்னியின் செல்வன்படத்திற்கு பின்னர் தமிழர் வரலாற்றை உலகம் அறியும்’ – ஜெயமோகன்

டீசர் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன்

டீசர் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன்

Ponniyin Selvan jayamohan : நம் குழந்தைகளுக்கு அமெரிக்க வரலாறு, ஐரோப்பிய வரலாறு தெரிந்திருக்கிறது. நம் வரலாறு தெரியவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர் தமிழர் வரலாற்றை உலகம் அறியும் என்று எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான ஜெயமோகன் கூறியுள்ளார்.

இந்திய சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்துடைய டீசர்5 மொழிகளில் இன்று வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதையொட்டி  டீசர் வெளியீட்டு விழா தஞ்சையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, நடிகை த்ரிஷா படத்தின் இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாய்பல்லவி மீதான நோட்டீசை ரத்து செய்ய முடியாது - தெலங்கானா உயர்நீதிமன்றம் 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, ‘நாமலாம் வரலாறு வகுப்புனு சொன்னாலே தூங்குவோம். நான்லாம் தூங்குறத மாதிரி  தெரியாம தூங்குவேன். கொஞ்ச நேரம் கவனிப்போம்.

அந்த மாதிரி கொஞ்ச நேரம் கவனிதத் நேரத்தில் இவர்களை பற்றி தெரிந்திருப்போம். அப்படி தெரிந்திருந்தும் நான் தமிழன் தமிழன் என கூறுவோம். என்னடா பண்ணாங்கனு கேட்ட தெரியாது. இந்தப் படத்தில் நம் முன்னோர்கள் என்ன பண்ணினார்கள் என தெரியும்.

' isDesktop="true" id="769169" youtubeid="LYMhbm2ORoc" category="cinema">

வரலாறு படிக்காமல், வரலாறு படைக்க முடியாது. அடுத்த தலைமுறைக்காக மணிரத்னம் இந்த படத்தை கொடுக்கிறார். இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் எப்போதும் கிடைக்காது.’ என்று பேசினார்.

பிரபல எழுத்தாளரும், பொன்னியின் செல்வன் கதாசிரியர், வசனகர்த்தாக்களில் ஒருவரான ஜெயமோகன் பேசுகையில், ‘இந்தியாவில் தமிழகத்திற்கு வெளியே சோழர்களை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அது செப்டம்பர் 30 வரை மட்டும்தான். சொல்லா பிழையை மணிரத்னம் குழு தீர்த்து வைக்கும்.

விஜய் மக்கள் இயக்க செயல்பாடுகளில் சந்தேகத்தைக் கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்

சோழர்களின் பெருமையை உலகத்திற்கு எடுத்துரைக்கும் குரலாய் நாம் இருக்க வேண்டும். இந்த கதையை ஒரு படமாக எழுதி பார்த்தோம். முடியவில்லை. கதை பெரியது.

நம் குழந்தைகளுக்கு அமெரிக்க வரலாறு, ஐரோப்பிய வரலாறு தெரிந்திருக்கிறது. நம் வரலாறு தெரியவில்லை. இந்தப் படம் வெளியான பிறகு தமிழர்களின் வரலாறு கலாச்சாரம், வாழ்ந்த இடம் தெரிய வரும்’ என்று பேசினார்.

First published:

Tags: Ponniyin selvan