‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் - வீடியோ

  • Share this:
‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

டாக்ஸிவாலா, டியர் காம்ரேட் படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல் லெய்ட் ஆகிய 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.


காதல் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை கிராந்தி மாதவ் இயக்கியுள்ளார். காதலர் தினத்தில் திரைக்கு வர உள்ள இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘மை லவ்’ என்ற லிரிக்கல் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் மீண்டும் கோபக்கார இளைஞனாகவே தோன்றியுள்ளார் விஜய் தேவரகொண்டா.

இத்திரைப்படத்தைத் தொடர்ந்து ஃபைட்டர், ஹீரோ மற்றும் இன்னும் பெயரிடப்படாத மற்றொரு படம் என மூன்று திரைப்படங்களில் விஜய் தேவரகொண்டா தற்போது நடித்து வருகிறார்.
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading