நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘லவ்வர்’ புகைப்படம்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘லவ்வர்’ புகைப்படம்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
  • Share this:
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

டாக்ஸிவாலா, டியர் காம்ரேட் படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் படம் வேர்ல்ட் பேமஸ் லவ்வர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல் லெய்ட் ஆகிய 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

தமிழில் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கனா படத்தை அடுத்து தற்போது வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்துள்ளார்.


காதல் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை கிராந்தி மாதவ் இயக்குகிறார். 2020-ம் ஆண்டின் காதலர் தினத்தில் இந்தப் படம் வெளியாகும் என்றும், ஜனவரி 3-ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்தின் போஸ்டர்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன.



படிக்க: நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன் - லாரன்ஸ்

அதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - விஜய் தேவரகொண்டா ஆகியோர் ஜோடியாக இருக்கும் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
First published: December 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading