ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்தி தேசிய மொழி அல்ல... வைரலாகும் பார்வதி, நித்யா மேனன் படக்காட்சி!

இந்தி தேசிய மொழி அல்ல... வைரலாகும் பார்வதி, நித்யா மேனன் படக்காட்சி!

வொண்டர் வுமன்

வொண்டர் வுமன்

இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள், ஆனால் அவை இந்தியாவின் தேசிய மொழிகள் அல்ல என்று மற்றொரு கதாபாத்திரம் சொல்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தி திணிப்புக்கு எதிராக வொண்டர் வுமன் படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பெங்களூர் டேஸ் படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனன் தனது வொண்டர் வுமன் படத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான கருத்துகளை வைத்ததால் கடந்த சில தினங்களாக செய்திகளில் இடம்பெற்று வருகிறார். நெட்டிசன்களிடம் ஒருபக்கம் ஆதரவையும் மறுபுறம் கடும் எதிர்ப்பையும் பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது அப்படத்தின் ஒரு காட்சி சமூக வலைதளங்களில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  நதியா நடத்தும் மகப்பேறு மையத்தில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் சந்திப்பதுதான் வொண்டர் வுமன் படத்தின் கதைக்களம். வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், தனக்கு ஆங்கிலம் புரியாததால் நதியாவை இந்தியில் கற்பிக்கச் சொல்கிறார். அப்போது, இன்னொரு கதாபாத்திரம் தனக்கு இந்தி புரியவில்லை என்று கூற, அதற்கு அந்த வட இந்திய பெண், இந்தி நாட்டின் தேசிய மொழி என்கிறார்.

  இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள், ஆனால் அவை இந்தியாவின் தேசிய மொழிகள் அல்ல என்று மற்றொரு கதாபாத்திரம் சொல்கிறது. இறுதியாக, வட இந்தியப் பெண் தனக்கு கொஞ்சம் மதராசி தெரியும் என்று கூறுகிறார். அதற்கு தென்னிந்தியாவில் நிறைய மொழிகள் இருப்பதாகவும், மதராசி என்று எந்த மொழியும் இல்லை என்றும் இன்னொரு கதாபாத்திரம் கூறுகிறது.

  இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, வடக்கு மற்றும் தெற்கு மக்களிடையே பேசுபொருளாய் மாறியுள்ளது. இப்படத்தில் நடிகைகள் பார்வதி, நித்யா மேனன், பத்மபிரியா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actress Parvathy, Nithya menon