சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் - சேலத்தில் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் - சேலத்தில் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
எதற்கும் துணிந்தவன்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், சேலத்தில் தாரை, தப்பட்டை அடித்தும், வாண வேடிக்கை காண்பித்தும், ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகரப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் அதிகாலையிலேயே ரசிகர்கள் அதிக அளவில் கூடினர்.
அப்போது, கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் தாரை, தப்பட்டை அடித்தும் அவர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ரசிகர்கள் சிலர் வாண வேடிக்கைகள் காண்பித்தது அங்கிருந்தவர்களை உற்சாக மிகுதியில் ஆழ்த்தியது. இதனிடையே எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை காண சேலத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனிடையே கடலூரில் உள்ள திரையரங்குகளில், பலத்த சோதனை செய்தபின், எதற்கும் துணிந்தவன் படம் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஜெய்பீம் பட பிரச்னையில் வன்னிய மக்களிடம் மன்னிப்பு கேட்காத வரை, சூர்யாவின் திரைப்படங்களை கடலூர் மாவட்டத்தில் திரையிரக்கூடாது என பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்களின் விவரங்களை பெற்றுக்கொண்ட போலீசார், அவர்களை சோதனை செய்தபின் படம் பார்க்க அனுமதித்தனர்
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.