Home /News /entertainment /

இந்த வாரம் தமிழில் வெளியான படங்கள்.. எப்படி இருக்கு?

இந்த வாரம் தமிழில் வெளியான படங்கள்.. எப்படி இருக்கு?

சிவகுமாரின் சபதம், ருத்ரதாண்டவம், லிப்ட்

சிவகுமாரின் சபதம், ருத்ரதாண்டவம், லிப்ட்

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ள போதும் தற்போது சகஜ நிலை திரும்பி வெள்ளிக்கிழமைகளில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

  • News18
  • Last Updated :
    தமிழில் இந்த வாரம் சிவகுமாரின் சபதம், ருத்ரதாண்டவம், லிப்ட் என 3 படங்கள் வெளியாகியுள்ளது.

    திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ள போதும் தற்போது சகஜ நிலை திரும்பி வெள்ளிக்கிழமைகளில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் இந்த வாரம் இரண்டு தமிழ் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில் ஒரு திரைப்படம் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

    அதில் முக்கியமாக திரைப்படமாக ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது. குடும்ப தகராறை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்பங்களுக்கு இடையே உள்ள பகையை நகைச்சுவை செய்தும் இந்த திரைப்படத்தை ஆதி உருவாகியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் காலம் காலமாக வெளியாகும் அதே கதையை சற்று சுவாரசிய படுத்த ஆதி முயன்று உள்ள நிலையில் அதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. படத்தில் அடுத்தடுத்து வரும் பாடல்கள் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தாதது சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் ஒரு திரை அனுபவத்தை சிவகுமாரின் சபதம் திரைப்படம் கொடுக்கும் என்ற விமர்சனத்தை பெற்று வருகிறது.

    இதேபோல மோகன் இயக்கத்தின் ரிச்சர்ட் நடிப்பில் ருத்ரதாண்டவம் திரைப்படமும் இன்று வெளியாகி உள்ளது. பெரும்பான்மை சமூகத்திற்கு பாதுகாப்பு இல்லாதது போலவும், உயர்சாதி பெண்களை ஆண்கள், யாரையும் காதலித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மீண்டுமொருமுறை திரவுபதி திரைப்படத்தின் இயக்குனர் இந்த திரைப்படத்திலும் வலியுறுத்தியுள்ளார்.

    சமகால அரசியல் நிகழ்வுகளை ஒரு சார்பில் நின்று பேசுவதால் இந்த திரைப்படம் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டுமே சந்தோஷப்படுத்த எடுத்த திரைப்படம் என்ற விமர்சனங்களை பெற்று வருகிறது.

    Also read... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா, விஜய் சேதுபதி படம்!

    இந்த இரண்டு திரைப்படங்கள் தவிர்த்து கவின், அமிர்தா ஆகியோர் நடிப்பில் லிப்ட் திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் வலை தளத்தில் வெளியாகி உள்ளது. நகைச்சுவை பேய் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் முழுக்க முழுக்க த்ரில்லர் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. பேய் படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது.

    ரசிகர்களை அச்சுறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது இந்த திரைப் படத்திற்கு பக்கபலமாக பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ள வினித் ரசிகர்கள் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

    இந்த திரைப்படங்கள் தவிர்த்து ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான நோ டைம் டு டை திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நான்கு திரைப்படங்களால் ரசிகர்களுக்கு இந்த வார இறுதி நல்ல பொழுது போக்கான இறுதியாக அமைந்துள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Hip hop Tamizha, Kavin

    அடுத்த செய்தி