அஜித் நடிக்கும் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள நிலையில் அஜித்துடன் பணியாற்றுவது குறித்து அவர் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இளம் இயக்குனராக விக்னேஷ் சிவன் வலம் வருகிறார். அவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் வெற்றியை பெற்றுள்ளன.
பாடலாசிரியர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பல முகங்களும் விக்னேஷ் சிவனுக்கு உண்டு. இந்நிலையில் அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் இயக்கவுள்ளார். அஜித்துடன் பணியாற்றுவது குறித்து விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
அஜித் சாருடன் 5 நிமிடம் பேசுவது என்றாலே வியப்பாகவும், சந்தோசமாகவும் இருக்கும். இப்போது அவருடன் சில மாதங்களுக்கு பணியாற்ற போகிறேன் என்பது விவரிக்க முடியாத மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதையும் படிங்க - விஜய் ரசிகர்களுக்கு மெகா அப்டேட்… தளபதி 66 ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்
அஜித் சாரின் ரசிகர்கள் அவரது மீது பேரன்பு வைத்துள்ளார்கள். அவர்களை திருப்தி படுத்தும் வகையில் நான் படத்தை உருவாக்க வேண்டும் என்கிற பொறுப்பு எனக்கு உள்ளது. அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் எனது படத்தில் இருக்க வேண்டும். அதை செய்வதுதான் என் வேலை.
'ரிசல்ட்டை விட வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்' என்று தோனி சொல்வதைப் போன்று இப்போது நான் எனது வேலையில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில், படத்திற்கான ஸ்க்ரிப்டை நல்லபடியாக முடித்து, நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும். எனக்கான டீமை அமைக்க வேண்டும். இதில் முழு கவனம் செலுத்தும்போது, நல்ல படத்தை அளிக்க முடியும் என நம்புகிறேன்.
இதையும் படிங்க - தளபதி 66 அப்டேட் தந்த இசையமைப்பாளர் தமன்… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்…
இவ்வாறு அவர் தெரிவித்தார். அஜித்தின் 62-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது அஜித் எச் வினோத் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத்தில் உள்ளார். இந்தப் படம் முடிந்ததும், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் பணிகள் தொடங்கும்.
விக்னேஷ் சிவன் தற்போது அஜித் 62 படத்திற்கான ப்ரீ ப்ரொடக்சன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.