Home /News /entertainment /

பொங்கலுக்கு வலிமையுடன் மோதும் விஷாலின் வீரமே வாகை சூடும்?

பொங்கலுக்கு வலிமையுடன் மோதும் விஷாலின் வீரமே வாகை சூடும்?

விஷால்

விஷால்

பண்டிகை நாளில் இரண்டு பெரிய படங்கள் தாராளமாக வெளியாகலாம். அப்படித்தான் தீபாவளிக்கு அண்ணாத்தயுடன் விஷாலின் எனிமி வெளியானது.

விஷாலின் வீரமே வாகை சூடும் படம் 2022 ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் நேற்று அதன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து பூசணிக்காய் உடைத்தனர்.

யார் பார்க்கிறார்களோ இல்லையோ... சீரான இடைவெளியில் சண்டைப் படமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் விஷால். அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, எனிமி என்று வரிசையாக படங்கள் வருகின்றன. எனிமிக்கு அடுத்து திரைக்கு வரவிருக்கும் விஷால் படம் வீரமே வாகை சூடும். சரவணன் என்பவர் இதனை இயக்க, விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி படத்தை தயாரிக்கிறது. 2022 ஜனவரி 26 படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

நேற்று வீரமே வாகை சூடும் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. அதனை கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. இந்நிலையில், ஜனவரி 26-க்கு பதில் பொங்கலுக்கு படத்தை திரையிட முயற்சி நடப்பதாக வதந்திகள் வர ஆரம்பித்துள்ளன.
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிப்போனதால், வரும் பொங்கலுக்கு வலிமை மட்டுமே பெரிய படமாக வெளியாகிறது.

பண்டிகை நாளில் இரண்டு பெரிய படங்கள் தாராளமாக வெளியாகலாம். அப்படித்தான் தீபாவளிக்கு அண்ணாத்தயுடன் விஷாலின் எனிமி வெளியானது. அதைப்போல் பொங்கலுக்கு வலிமையுடன் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட இருப்பதாக இணையத்தில் வதந்தி பரப்பி வருகின்றனர். நேற்று தான் படப்பிடிப்பே முடிந்துள்ளது. எடிட் செய்து, டப்பிங் பேசி, பின்னணி இசைச் சேர்த்து படத்தை வெளியிட இரண்டு வாரங்களாகும். பொங்கலுக்கு படம் வெளியாக வாய்ப்பேயில்லை என்கிறார்கள்.

Will Vishal's Veerame vaagai soodum release with Ajith's Valimai for Pongal, Vishal Veerame Vaagai Soodum, ajith valimai, valimai release, valimai release date, valimai movie, வலிமை திரைப்படம், அஜித் வலிமை, வலிமை ரிலீஸ், veeram vaagai soodum, vishal, veeram vaagai soodum director, vishal 31 director, vishal 31 movie, thupparivaalan 2, thupparivaalan 2 full movie. enemy imdb, thupparivaalan 2 imdb, vishal wife name, vishal new movie, vishal age, vishal instagram, vishal marriage, விஷால் வீரமே வாகை சூடும், வீரமே வாகை சூடும் திரைப்படம், வீரமே வாகை சூடும் ரிலீஸ், வீரமே வாகை சூடும் விஷால், வீரமே வாகை சூடும் ரிலீஸ் தேதி Will Vishal's Veerame vaagai soodum release with Ajith's Valimai for Pongal, Vishal Veerame Vaagai Soodum, ajith valimai, valimai release, valimai release date, valimai movie, வலிமை திரைப்படம், அஜித் வலிமை, வலிமை ரிலீஸ், veeram vaagai soodum, vishal, veeram vaagai soodum director, vishal 31 director, vishal 31 movie, thupparivaalan 2, thupparivaalan 2 full movie. enemy imdb, thupparivaalan 2 imdb, vishal wife name, vishal new movie, vishal age, vishal instagram, vishal marriage, விஷால் வீரமே வாகை சூடும், வீரமே வாகை சூடும் திரைப்படம், வீரமே வாகை சூடும் ரிலீஸ், வீரமே வாகை சூடும் விஷால், வீரமே வாகை சூடும் ரிலீஸ் தேதி

பொங்கலோ, குடியரசு தினமோ? படம் வெற்றி பெறுவதுதானே முக்கியம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor vishal, Ajith, Valimai

அடுத்த செய்தி