Home /News /entertainment /

விஜய்யின் தளபதி 67 லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸாக இருக்குமா?

விஜய்யின் தளபதி 67 லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸாக இருக்குமா?

விஜய் - லோகேஷ் கனகராஜ்

விஜய் - லோகேஷ் கனகராஜ்

'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் 'தளபதி 67' படத்திற்காக லோகேஷ் இணைவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இந்தப் படமும் அவரது சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தளபதி விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இணையும் படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸுடன் ஒருங்கிணைக்கப்படுமா என்ற ஆவல் எழுந்துள்ளது. 

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வெற்றி பெற்றதில் இருந்தே, லோகேஷ் தனது முந்தைய படமான 'கைதி'யில் நடித்த கதாபாத்திரங்களை நேர்த்தியாக ஒருங்கிணைத்து தனக்கென பிரபஞ்சத்தை உருவாக்கியதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஹாலிவுட்டில் இருக்கும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸைப் போல, இதனை லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU) என்றும் அழைத்து வருகிறார்கள். இளம் இயக்குனர் லோகேஷ் வெற்றிகரமாக, 'கைதி' படத்தில் நடித்த கதாபாத்திரங்களை விக்ரமில் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், கமல்ஹாசனின் நடிப்பில் 1986-ல் வெளியான 'விக்ரம்' படத்தின் கதையோடு இணைத்து கைத்தட்டல்களை அள்ளினார்.

    சுவாரஸ்யமாக, சூர்யா நடித்த ரோலக்ஸ் என்ற புதிய கதாபாத்திரத்தை உருவாக்கி, இன்னும் பெரிய சினிமா பிரபஞ்சத்தை உருவாக்கும் திட்டத்தையும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்போது 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் 'தளபதி 67' படத்திற்காக அவர் இணைவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இந்தப் படமும் அவரது சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 'தளபதி 67' அவரது சினிமாடிக் யுனிவர்ஸில் இடம்பெறுமா என்ற கேள்விக்கு, அதை மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை. அதே வேளையில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும் அதைப் பற்றி பேசுவதாகக் கூறினார்.

    3 சர்வதேச விருதுகள் 2 நாமினேஷன்களைப் பெற்ற பார்த்திபனின் இரவின் நிழல்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    'தளபதி 67' லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் இடம்பிடித்தால், அந்தப் படம் லோகேஷின் முந்தைய படமான 'கைதி' மற்றும் 'விக்ரம்' ஆகியவற்றை ஒருங்கிணைக்குமா அல்லது 'மாஸ்டர்' படத்தின் ஒருங்கிணைத்து மற்றொரு பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருக்குமா என்பதை திரையில் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். இந்த படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளியுடன் இணைந்து 'தளபதி' 66 படத்தில் நடித்து வருகிறார். இது ஜனவரி 2023-ல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Thalapathy vijay

    அடுத்த செய்தி