ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

64 வயதில் 3வது திருமணம் செய்து கொண்டாரா வாரிசு பட நடிகை?

64 வயதில் 3வது திருமணம் செய்து கொண்டாரா வாரிசு பட நடிகை?

நடிகை ஜெயசுதா

நடிகை ஜெயசுதா

Actress jayasudha 3rd marriage | தன்னை பற்றி பரவி வரும் தகவலுக்கு நடிகை ஜெயசுதா விளக்கமளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras]

தொழிலதிபர் ஒருவரை நடிகை ஜெயசுதா 3வதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ஜெயசுதா சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த துணை நடிகைக்கான விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.

நடிகை ஜெயசுதா தயாரிப்பாளர் வட்டே ரமேஷின் மைத்துனரான காகர்லபுடி ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 1982ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன்பின் 1985ம் ஆண்டு ஜீதேந்திராவின் உறவினரான நிதின் கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

நிதின் கபூர் 2017ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், 2 மகன்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இவர் தற்போது வெளியாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடித்து தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது 64 வயதாகும் ஜெயசுதா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக இணையங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும், ஜெயசுதாவும் தொழிலதிபரும் பல நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்றும், அவர் தன்னுடன் நட்பு ரீதியாகவே பல நிகழ்ச்சிகளுக்கு வருவதாகவும் ஜெயசுதா தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Actress, Marriage, Varisu, Viral