தளபதி 66 வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியான பதிவுக்கு புயல் வேகத்தில் லைக்கும் ரீ ட்வீட்டும் கிடைத்து வருகின்றன.
விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு இதே நாளில் வெளியானது. விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 3.90 லட்சம் லைக்குகளையும், 1.69 லட்சம் ரீ ட்வீட்களையும் பெற்றுள்ளது.
விஜய் நடித்த படங்களிலேயே அதிகம் லைக் மற்றும் ரீ ட்வீட்களை பெற்ற பதிவாக பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் உள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை 6.01-க்கு விஜய்யின் 66வது படமான வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - அடடா மழைடா அட மழைடா... தமிழில் வெளியான மழை பாடல்கள் ஒரு லிஸ்ட்!
பீஸ்ட் சறுக்கியதால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் நிலையில், அதி வேகத்தில் வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு லைக், ரீ ட்வீட்கள் குவிந்து வருகிறது.
இதனால் ஓரிரு நாட்களில் பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் சாதனையை வாரிசு ஃபர்ஸ்ட் லுக் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இன்னொரு ஹீரோயின் இடம்பெறுவார் என முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது அதுபற்றிய அப்டேட் ஏதுமில்லை.
இதையும் படிங்க - லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணையும் தளபதி 67 படத்தின் புதிய தகவல்கள்...
இவர்களுடன் சரத்குமார், குஷ்பு, பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். தெலுங்கின் முன்னணி இயக்குனர் வம்சி பைடிபள்ளி வாரிசு படத்தை இயக்குகிறார்.
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் உருவாகும் வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார். வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகும் என ஃபர்ஸ்ட் லுக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.