ஆந்திராவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தயாரிப்பாளர்கள், சினிமா துறையினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்ட பின் சினிமா தயாரிப்பு செலவுகள் அதிகரித்திருப்பது, நடிகர் நடிகைகள் ஆகியோருக்கு கொடுக்கப்படும் அதிக சம்பளத்தை குறைக்க இயலாமல் திரைத்துறை திணறுவது, டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தெலுங்கானா ஆந்திரா ஆகிய மாநில அரசுகள் மறுப்பு தெரிவித்து வருவது, ஓ டி டி தளத்தில் திரைப்படங்கள் வெளியாவதால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்படும் இழப்பு, தொழிலாளர்கள் அதிக ஊதியம் கேட்டு போராட்டம் நடத்தியது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று முதல் திரைப்பட தயாரிப்பை நிறுத்துவது என்று தெலுங்கில் திரை உலகில் உள்ள 24 சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளன.
இதனால் இப்போது தயாரிப்பில் இருக்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட திரைப்பட தயாரிப்பு பணிகள் இன்று முதல் நிறுத்தப்படும். இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தெலுங்கு துறை உலகம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமா ராவ் மகள் தூக்கிட்டு தற்கொலை…
இதற்கிடையே, விஜய் நடித்து வரும் வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.
தெலுங்கு சினிமா துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் விஜய்யின் வாரிசு படத்தின் ஷூட்டிங்கிற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்துள்ள பேட்டியில், ‘தெலுங்கு படங்களின் ஷூட்டிங் தான் நிறுத்தப்பட்டுள்ளது. விஜய் உடனான எனது படம் வாரிசு தமிழ் படமாகும். எனவே வாரிசு படத்திற்கு எந்த சிக்கலும் கிடையாது’ என்று தெரிவித்தார்.
இணையத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தின் நீக்கப்பட்ட சண்டைக் காட்சி!
வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.