பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் பயோ பிக் படத்தை இயக்குனர் சுதா கொங்கரா எடுக்கவிருப்பதாக தகவல்கள் பரவின. அதுகுறித்து சுதா கொங்கரா இன்று விளக்கம் அளித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி அடைந்த சூரரைப் போற்று படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். டெக்கான் ஏர் நிறுவனத்தை தொடங்கிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது.
அத்துடன் ஆறு தேசிய விருதுகளையும் வென்றது. இந்த நிலையில் அந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா வாழ்க்கையை படமாக்குகிறார் என இணையதளங்களில் செய்தி பரவி வந்தது. அதை சுதா கொங்கரா அவர் மறுத்துள்ளார்.
வாரிசு பட பாடலின் மேக்கிங் வீடியோவில் இடம்பெறும் சிம்பு… நன்றி தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்
மேலும் நான், ரத்தன் டாடாவின் மிக தீவிர ரசிகர் எனவும், ஆனால் அவர் வாழ்க்கையில் வரலாற்றை படமாக்கும் எண்ணம் தற்போது இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
I’m a huge admirer of Mr. Ratan Tata. However I have no intention of making his biopic at this moment . But thank you all for your interest in my next film! Soon! 😊
— Sudha Kongara (@Sudha_Kongara) December 3, 2022
இருந்தபோதிலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் ரசிகர்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். சுதா கொங்கரா தற்போது இந்தியில் உருவாகும் சூரரைப் போற்று ரீமேக் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு… வெற்றிமாறன் பட ஷூட்டிங்கின்போது விபரீதம் ஏற்பட்டதாக தகவல்
சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் சூர்யா நடித்த கதாப்பாத்திரத்தில் முன்னணி இந்தி நடிகர் அக்சய் குமார் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு சுதா கொங்கரா ஒரு படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே.ஜி.எஃப். 1 மற்றும் 2, காந்தாரா உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்ததுதான் இந்த ஹோம்பலே பிலிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood