ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது விழா, அகாடமி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதித்து ஆஸ்கர் அகாடமி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா திங்கள் கிழமை கோலாகலமாக நடைபெற்றது. கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக ஆஸ்கார் விருது நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து நகைச்சுவையாக பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜடா பிங்கெட்டின் கணவரும் ஹாலிவுட் நடிகருமான வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
பின்னர் அவர் தனது இருக்கைக்குத் திரும்பி, கிறிஸ் ராக்கை நோக்கி கூச்சலிட்டார். அப்போது அரங்கம் முழுவதிலும் ஒலி முடக்கப்பட்டது. ஸ்மித்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த அகாடமி அமைப்பு, இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது.
மேலும் படிக்க: முத்தமிட, கட்டியணைக்க தடை... கொரோனா பரவலை தொடர்ந்து சீனாவில் அதிரடி ரூல்ஸ்.
இதனிடையே, விருது நிகழ்ச்சியின் போது தான் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாக நடிகர் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார். தனது செயலால் பெரும் சங்கடம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். விழாவில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், தன் மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டதாக தெரிவித்தார்.
அன்பு நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. என்றும் இச்செயலால் பெரும் சங்கடம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள வில் ஸ்மித், கிறிஸ் ராக்கிடமும், நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமும், மன்னிப்பு கோருவ்தாகவும் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து கிறிஸ் ராக் போலீசில் புகார் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். அதே சமயம் ஆஸ்கார் கமிட்டி இது குறித்து விசாரணை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் வெளிப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை ஆகும். இந்த எதிர்பாராத சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். அந்த அசாதாரண சூழலிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸ்மித்துக்கு தடை என்னும் முடிவு கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடும், அகாடமியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oscar Awards, Will Smith