Shilpa Shetty: ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ராவை தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டியும் கைதாகிறாரா?

ஷில்பா ஷெட்டி - ராஜ்குந்த்ரா

ஷில்பா ஷெட்டி குற்றமற்றவர் என்ற நற்சான்று வழங்க முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி கைதாக வாய்ப்பிருப்பதாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.

    பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்ததாக கடந்த வாரம் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்தது நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஏற்கனவே தெரியுமா? அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிய போலீசார் சமீபத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஷில்பா ஷெட்டி குற்றமற்றவர் என்ற நற்சான்று வழங்க முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதோடு ராஜ்குந்த்ராவின் பண பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு செய்ய மும்பை குற்றப்பிரிவு போலீசார் நிதி தணிக்கையாளர்களையும் நியமித்து உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தக் குழுவின் தணிக்கை வளையத்தில் ராஜ்குந்த்ராவின் வயான் இண்டஸ்ட்ரீஸ், ஆபாச படம் வெளியிட்டு மோசடி செய்த நிறுவனத்தின் கணக்கு மற்றும் ஷில்பா ஷெட்டி இயக்குனராக செயல்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்கு ஆகியவையும் அடங்கியுள்ளது. ஆபாச பட தொழில் மூலம் ராஜ்குந்த்ராவிற்கு வெளிநாட்டில் இருந்து வந்த பணம், ஷில்பா ஷெட்டியின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆகவே ஷில்பா ஷெட்டிக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஒருவேளை கிடைக்கும் பட்சத்தில் கணவர் ராஜ்குந்த்ராவை தொடர்ந்து, ஷில்பா ஷெட்டியும் கைதாக வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: