Rajinikanth: ரஜினியின் அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாகுமா?

ரஜினிகாந்த்

சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது.

  • Share this:
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பால் பல படங்களின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டதால், அண்ணாத்த படமும் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அண்ணாத்த படத்தில் ரஜினி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் அவரின் தங்கையாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. முக்கிய வேடங்களில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியான், சதீஷ், சூரி நடிக்கின்றனர். ஜெகபதி பாபு வில்லன். சிறுத்தை சிவா படத்தை இயக்க, இமான் இசையமைக்கிறார்.

    சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது. அண்ணன் - தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு. ஏப்ரல் 9-ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கிய படப்பிடிப்பு இன்று வரை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. ஓரிரு நாளில் ரஜினி சென்னை திரும்பலாம் என்கின்றன செய்திகள்.

    அவர் சென்னை திரும்பியதும் டப்பிங் பணிகள் தொடங்கும். படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிவடைந்ததால் நவம்பர் 4-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு படம் கண்டிப்பாக வெளியாகும் என்கின்றனர். தீபாவளி வெளியீட்டில் சன் பிக்சர்ஸும் உறுதியாக உள்ளது. அதனால், ரசிகர்கள் சந்தேகம் கொள்ள தேவையில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: