ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

2K கிட்ஸ் விரும்பும் வகையில் பொன்னியின் செல்வன் படம் இருக்குமா? மணிரத்னம் விளக்கம்

2K கிட்ஸ் விரும்பும் வகையில் பொன்னியின் செல்வன் படம் இருக்குமா? மணிரத்னம் விளக்கம்

மணிரத்னம்

மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள ஒவ்வொரு கேரக்டரையும் எடுத்து தனித்தனியாக பண்ண முடியும். இது நாவலுக்கும் படத்துக்கு மிகப்பெரிய பலம். – மணி ரத்னம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2K கிட்ஸ் விரும்பும் வகையில் பொன்னியின் செல்வன் படம் இருக்குமா? என்பது குறித்து படத்தின் இயக்குனர் மணி ரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின்செல்வன் படத்தின் முதல் பாகம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் படம் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு மணி ரத்னம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது-

பொன்னியன் செல்வன் நாவலின் வலிமை என்னவென்றால் அதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் தான். அதை மிக அற்புதமாக கல்கி விவரித்திருப்பார். 3 அல்லது 4 முறை இந்த நாவலை படித்திருக்கிறேன். பள்ளி முடித்த பின்னர், கல்லூரிகளிலும், திரைப்படத்தை இயக்கிய காலகட்டத்திலும் இந்த நான் நாவலை படித்துள்ளேன்.

பொன்னியின் செல்வன் படத்தின் முன்னணி கதாபாத்திரங்கள் ஒரு லிஸ்ட்!

பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள ஒவ்வொரு கேரக்டரையும் எடுத்து தனித்தனியாக பண்ண முடியும். இது நாவலுக்கும் படத்துக்கு மிகப்பெரிய பலம். இது சினிமாவுக்கே எழுதப்பட்ட நாவலாக கருதுகிறேன்.

என் குடும்பத்தில் உள்ள அனைவரும் பொன்னியின் செல்வன் நாவலை படித்துள்ளார்கள். அவர்களுடன் நான் கலந்துரையாடி இருக்கிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து கல்கி கதை எழுதியிருக்கிறார்.

' isDesktop="true" id="810983" youtubeid="kT7XMkoxEfo" category="cinema">

அதனை 70 ஆண்டுகளுக்கு முன்பு கதையாக எழுதி இருக்கிறார். ஆனால் இன்றுவரை அவர் எழுதிய சம்பவங்கள் இந்த காலத்து சூழலுக்கும் பொருந்துகிறது. அவர் நாவலில் குறிப்பிட்ட அரசியல், இந்தக் காலத்திற்கும் பொருந்தும்.

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் குந்தவை வந்தியத்தேவன் காதல்!

அதனை படித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவராலும் இதனை உணர்ந்து கொள்ள முடியும். இதனால் இன்றைய கால சினிமா ரசிகர்களுக்கு ( 2K Kids )மிக எளிதாக இந்த படம் ரீச் ஆகும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Published by:Musthak
First published:

Tags: Mani rathnam, Ponniyin selvan