மாஸ்டர், சூரரைப் போற்று திரைப்படங்கள் திட்டமிட்ட தேதியில் வெளிவருமா?

ஜீவாவின் ஜிப்ஸி, துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் ஆகிய படங்களும் திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

மாஸ்டர், சூரரைப் போற்று திரைப்படங்கள் திட்டமிட்ட தேதியில் வெளிவருமா?
சூர்யா, விஜய்
  • Share this:
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் தமிழகத்தில் வரும் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாவதிலும் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளன.

ஏற்கனவே படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீஸ் வேலைகளும் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டாலும் கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாட்டு திரையரங்க சூழல்களை மனத்தில்கொண்டு இவ்விரு படங்களின் ரிலீஸ் தேதிகளும் மே மாதத்திற்கு மாற்றியமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.


அதேபோல், அண்மையில் வெளியான ஜீவாவின் ஜிப்ஸி, துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் ஆகிய படங்களும் திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

Also see:
First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading