Home /News /entertainment /

இந்திய அளவில் வலிமை செய்த சாதனை... முறியடிக்குமா கே.ஜி.எஃப் 2?

கே.ஜி.எஃப். 2 படத்திலிருந்து தற்போது வரை  டீசர், ட்ரெய்லர், 3 பாடல்கள் ஆகியவை வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளதால், நாளை படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்திய அளவில் அஜித்தின் வலிமை படம் செய்த சாதனையை கே.ஜி.எஃப். 2 நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப். 2 திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. முதல்பாகம் இந்தியா முழுவதும் பிரமாண்ட வெற்றியை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு பன் மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 250-க்கும் அதிகமான திரையரங்குகளில் கே.ஜி.எஃப். 2 வெளியிடப்படவுள்ளது. இதையொட்டி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் தளமான புக் மை ஷோ (Book My Show)தளத்தில், கே.ஜி.எஃப். 2 படத்தை முன்பதிவு செய்வதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த தளத்தில் வலிமை படத்திற்கு டிக்கெட் புக் செய்வதற்கு 22 லட்சம் பேர் அதாவது 2.2 மில்லியன்பேர் ஆர்வம் காட்டியிருந்தனர்.

இதற்கு அடுத்த இடத்தில் தற்போது கே.ஜி.எஃப். 2 படம் இருந்து வருகிறது.

இன்றைக்குள் பேர் கே.ஜி.எஃப் 2 படத்தை பார்ப்பதற்கு ஆர்வம் (interested)தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் வலிமையை விடவும் அதிக விருப்பங்களை பெற்று, புதிய சாதனையை கே.ஜி.எஃப். 2 ஏற்படுத்தும் என்று சினிமா விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

கே.ஜி.எஃப். 2 படத்திலிருந்து தற்போது வரை டீசர், ட்ரெய்லர், 3 பாடல்கள் ஆகியவை வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளதால், நாளை படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: KGF 2, Valimai

அடுத்த செய்தி