Home /News /entertainment /

கலவை விமர்சனம்... கே.ஜி.எஃப் 2 வெளியீட்டால் பீஸ்ட் வசூல் பாதிக்குமா?

கலவை விமர்சனம்... கே.ஜி.எஃப் 2 வெளியீட்டால் பீஸ்ட் வசூல் பாதிக்குமா?

பீஸ்ட் - கே.ஜி.எஃப்

பீஸ்ட் - கே.ஜி.எஃப்

கேஜிஎஃப் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெறும் பட்சத்தில் அந்தத் திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் முன்வருவார்கள்.

பீஸ்ட் திரைப்படத்தின் விமர்சனங்கள் கலவையாக உள்ள நிலையில் நாளை கேஜிஎப் திரைப்படம் வெளியாக உள்ளதால் பீஸ்ட் வர்த்தகம் மேலும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்தது. தமிழ் புத்தாண்டையொட்டி தொடர் விடுமுறை வருவதால் ஏப்ரல் 14ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்தை வெளியிடுவது படக்குழு உறுதியாக இருந்த நிலையில் கன்னடத்தில் உருவாகி இந்தியாவின் எல்லா மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ள கேஜிஎப் திரைப்படமும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாவதால் ஒருநாள் முன்னதாக விஜயின் திரைப்படம் வெளியானது.

இதன் மூலம் ஐந்து நாட்கள் வசூலை அள்ளலாம் என விஜய் படக்குழுவினர் திட்டமிட்டனர். மேலும் தமிழகத்தில் உள்ள ஆயிரம் திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படத்திற்கு 800 திரையரங்குகளில் என்றும் கேஜிஎப் திரைப்படத்திற்கு 200 திரையரங்குகள் என்றும் பிரிக்கப்பட்டது.

இதையும் படிங்க - இனி பயங்கரமா இருக்கும் - பீஸ்ட் படத்தை கலாய்த்துத் தள்ளிய விஜய் டிவி குழுவினர்!

நாளை கேஜிஎப் திரைப்படம் வெளியாகும் நாளில் மட்டும் அந்த திரைப்படத்திற்கான ஆரம்ப காட்சிகளில் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

திரைப்படம் ஆறுதல் அளிப்பதாக கூறப்பட்டாலும், இன்னொருபுறம் விஜய் ரசிகர்களுக்கு கூட திருப்திகரமான திரைப் படமாக பீஸ்ட் அமையவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக திட்டமிட்டபடி வரும் வாரத்தில் பீஸ்ட் வசூல் வேட்டை ஆட முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க - இந்திய அளவில் வலிமை செய்த சாதனை... முறியடிக்குமா கே.ஜி.எஃப் 2?

மேலும் யஷ் நடித்துள்ள கேஜிஎப் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெறும் பட்சத்தில் அந்தத் திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் முன்வருவார்கள். இதன் காரணமாக நாளை முதல் அடுத்தடுத்த நாட்களில் பீஸ்ட் திரைப்படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை குறையலாம் என்றும் பெரிய திரைகள் கேஜிஎப் திரைப்படத்திற்கு ஒதுக்கப்படலாம் என்றும் சிறிய திரைகளுக்கு பீஸ்ட் நகர்த்தப்படலாம் என்றும் தற்போது பேச்சு எழுந்துள்ளது.

ஒருவேளை அப்படி நடக்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்ற விஜய்யின் இடத்திற்கு அது சற்று ஆட்டம் காட்டும் விஷயமாகவே அமையும். விஜயின் வசூல் வர்த்தகத்தை கேஜிஎப் ஆட்டிப் பார்க்குமா என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Published by:Musthak
First published:

Tags: Beast, KGF 2

அடுத்த செய்தி