பெண்களுக்கு பாதுகாப்பு தரும் கட்சியில் நான் விரைவில் இணைவேன் - நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி

பெண்களுக்கு பாதுகாப்பு தரும் கட்சியில் நான் விரைவில் இணைவேன் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

  • Share this:
சென்னை வடபழனியில் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நடத்திய  101-வது நாள் கொரோனா உதவி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை கஸ்தூரி கலந்துகொண்டார். அப்பொழுது மேடையில் பேசிய விஜயின் தந்தை எஸ்ஏசி நடிகை கஸ்தூரிக்கு அரசியலுக்கு வர அழைப்பு விடுத்தார். தன்னை அப்பா என அழைக்கும் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என மேடையில் கஸ்தூரியிடம் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரி, நானும் விஜய்யின் தந்தையை அப்பா என்றுதான் அழைப்பேன். ஆனால் முதலில் எஸ்ஏசி கட்சி துவங்குவது குறித்து விஜய்க்கும் விஜய்யின் அம்மா ஷோபா விற்கும் உள்ள நிலைப்பாட்டை இருவரும் கலந்து ஆலோசித்து மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அதன் பிறகு அனைவரும் நல்ல முடிவை எடுப்பார்கள் என்றார்.தனக்கு தொடர்ந்து பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். பாஜகவில் இணைய உள்ளதாக வரும் தகவல் உண்மையா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், பெண்களுக்குப் பாதுகாப்பு தரும் கட்சியைத் தேர்ந்தெடுத்து அதில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாகவும், பாஜகவில் இணையும் முடிவை தற்போதுவரை எடுக்கவில்லை என்றும் கூறினார். பல ஆண்டுகள் கால தாமதம் செய்யாமல் சில மாதங்களிலேயே தன்னுடைய முடிவை அறிவிப்பேன் நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.
Published by:Rizwan
First published: