• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Ilayaraja : மணிகண்டன் படத்துக்கு இளையராஜா இனி இசையமைப்பாரா? 

Ilayaraja : மணிகண்டன் படத்துக்கு இளையராஜா இனி இசையமைப்பாரா? 

கடைசி விவசாயி திரைப்படம்

கடைசி விவசாயி திரைப்படம்

Ilayaraja Music : கடைசி விவசாயியை டிசம்பரில் திரையரங்கில் வெளியிட மணிகண்டன் முடிவு செய்துள்ளார்.

  • Share this:
    காக்கா முட்டை மணிகண்டன் இயக்கியிருக்கும் கடைசி விவசாயி படம் டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டரில் பாடல்கள் இளையராஜா என்று உள்ளது. இது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

    காக்கா முட்டை மணிகண்டன் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களுக்குப் பிறகு விவசாயிகளின் பிரச்சனைகளை மையப்படுத்தி இயக்கிய படம் கடைசி விவசாயி. படத்தை அவரே தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி படத்தில் நடித்திருந்தாலும் வயதான விவசாயி ஒருவர்தான் பிரதானமாக படத்தில் வருகிறார். யோகி பாபுக்கு நல்ல வேடம்

    இந்தப் படத்தை சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சி நடந்தது. தனஞ்செயன் சோனிலிவ்விலிருந்து வெளியேறியதும் நரகாசூரன், கடைசி விவசாயி போன்ற படங்களுக்கான கதவும் அடைக்கப்பட்டது. தற்போதைய செய்தி, கடைசி விவசாயியை டிசம்பரில் திரையரங்கில் வெளியிட மணிகண்டன் முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரில் பாடல்கள் இளையராஜா என உள்ளது. பொதுவாக இசை என்றுதான் போடுவார்கள். ஏன் பாடல்கள்...?

    also read : சிம்பு படத்தில் பிரபல மலையாள நடிகர்...?

    அதற்குமுன் ஒரு சின்ன பிளாஷ்பேக். மணிகண்டன் தனது படத்துக்கு முதலில் குற்றமும் தண்டனையும் என்றுதான் பெயர் வைத்திருந்தார். இளையராஜாதான் அதைவிட குற்றமே தண்டனை பொருத்தமாக இருக்கும் என சொல்ல, மணிகண்டனும் பெயரை மாற்றினார். குற்றம் எப்படி ஒருவனுக்கு தண்டனையாகும்? பொருளற்ற தலைப்பாக அது எஞ்சியது. எனினும் இயைராஜாவுக்காக அந்த பெயர் மாற்றத்தை செய்தார்

    நிற்க. கடைசி விவசாயியிக்கு வருவோம். இந்தப் படத்துக்கு இளையராஜா அமைத்த பின்னணி இசை மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை. வழக்கமான தமிழ் சினிமாவுக்கு போட்டது போல் இருக்கிறது, தான் எடுத்த கதைக்கும், எடுத்தவிதத்திற்கும் பொருத்தமில்லை என்று வெளிநாடு சென்று அங்குள்ள இசைக்கலைஞர்களை வைத்து பின்னணி இசையை தனியாக அமைத்துக் கொண்டார். இதற்காக அவர் கூடுதலாக 50 லட்சங்கள் செலவளித்ததாக கேள்வி. இதன் காரணமாகவே பாடல்கள் இளையராஜா என போஸ்டரில் போட்டுள்ளார்.

    இளையராஜா இசையமைக்கும் பாடல்களுக்கு பல்லவியை பெரும்பாலும் அவரே எழுதுவார். அதை மாற்றினாலே அவருக்கு கோபம் வரும். மணிகண்டன் மொத்த படத்தின் பின்னணியை இசையையுமே தூக்கிவிட்டு வேறு இசைக்கலைஞர்களை வைத்து பின்னணி இசை அமைத்துள்ளார். இதற்கு மேல் இளையராஜா அவரது படத்துக்கு இசையமைப்பார்?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: