ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

 நடிகை கங்கனா ட்விட்டர் கணக்கை எலான் மஸ்க் மீட்டெடுப்பாரா?

 நடிகை கங்கனா ட்விட்டர் கணக்கை எலான் மஸ்க் மீட்டெடுப்பாரா?

கங்கனா ராணாவின் ட்விட்டர்

கங்கனா ராணாவின் ட்விட்டர்

டெஸ்லா CEO எலான் மஸ்க் ட்விட்டரை வசமாக்கியதை அடுத்து நடிகை கங்கனா ரனா மகிழ்ச்சி அடைந்துள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட கங்கனா ட்விட்டர் கணக்கின் மீண்டும் பெற முடியும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கங்கனாவின் ட்விட்டர் கணக்கு கடந்த ஆண்டு நிரந்தரமாக இடைநிறுத்தப்பட்டது. இதுகுறித்து அப்போது ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் அளித்த விளக்கத்தில், "ட்விட்டர் விதிகளை மீண்டும் மீண்டும் மீறுவதால், குறிப்பாக எங்களின் வெறுக்கத்தக்க நடத்தைக் கொள்கை மற்றும் தவறான நடத்தைக்காக குறிப்பிடப்பட்ட கணக்கு நிரந்தரமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நடத்தைக் கொள்கை. எங்கள் சேவையில் உள்ள அனைவருக்கும் ட்விட்டர் விதிகளை நியாயமாகவும் பாரபட்சமின்றியும் செயல்படுத்துகிறோம்."என தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் மஸ்க்  அண்மையில் ட்விட்டர் இன் புதிய உரிமையாளரானதைத்தொடர்ந்து மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் கொள்கைத் தலைவர் விஜயா காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நீக்கப்பட்டுள்ளனர்.

  இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை, நடிகை கங்கனா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ரசிகர் ஒருவரின் ஸ்டோரியை பகிர்ந்து இருந்தார், அதில் அவர் நடிகையின் ட்விட்டர் கணக்கை மீட்டெடுக்குமாறு எலான் மஸ்க்கிடம் கேட்டபதாக இருந்தத்து.

  இதையடுத்து டொனால்ட் டிரம்பின் மற்றும் கங்கனாவின் நீக்கப்பட்ட ட்விட்டர் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டனர். அதில் ஒரு அந்த ட்வீட்க்கு , "'பேச்சு சுதந்திரத்தின் உணர்வில்  நம்புகிறேன்  எலான் மஸ்க் கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கை மீட்டெடுக்கவும் என தெரிவித்துள்ளார்.  இதை கங்கனா ஒரு போஸ்டின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் 'எலான் மஸ்க் ட்விட்டரின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார், தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் பிற உயர் நிர்வாகிகளை நீக்குகிறார் என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பகிர்ந்த கங்கனா. மே 2021 இல், கங்கனாவின் ட்விட்டர் கணக்கு 'திரும்பத் திரும்பத் திரும்ப ட்விட்டர் விதிகளை மீறியதற்காக நிரந்தரமாக இடைநிறுத்தப்பட்டது' பற்றியும் நினைவு  கூர்ந்துள்ளார்.

  Read More: ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங்.. இன்ஸ்டா பதிவால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா!

  எனவே ட்விட்டருக்கு எலான் மஸ்க் உரிமையாளரானதைத்தொடர்ந்து, குயின் நடிகை கங்கனா விரைவில் ட்விட்டர் தளத்தில் மீண்டும் வருவார் என்று அவரது ரசிகர்கள் ட்விட் செய்து வருகிறார்கள்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Kangana Ranaut, Twitter