முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் டிசம்பர் 10 வெளிவருமா?

ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் டிசம்பர் 10 வெளிவருமா?

ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன் ஒரு சில திரைப்படங்கள் தவிர மற்ற படங்களை எந்த பின்விளைவு குறித்து யோசிக்காமல் கடுமையாக கிண்டலடிக்கக் கூடியவர்.

  • Last Updated :

ப்ளூ சட்டை மாறன், எழுதி, இயக்கி, நடித்து, இசையமைத்திருக்கும் ஆன்டி இண்டியன் திரைப்படம் டிசம்பர் 10 வெளியாகுமா என்று சிலர் சந்தேக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் ஒரு சில திரைப்படங்கள் தவிர மற்ற படங்களை எந்த பின்விளைவு குறித்து யோசிக்காமல் கடுமையாக கிண்டலடிக்கக் கூடியவர். அவரால் நொந்து போன திரையுலகினரின் பட்டியல் பெரியது. திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கூட மாறனின் விமர்சனத்தால் படத்துக்கு கூட்டமில்லாமல் போனதாக காய்ந்திருக்கிறார்கள். அதனால், மாறன் தனது படத்தை திரையரங்கில் வெளியிடுவதாகச் சொன்ன போது பலரும் நம்பவில்லை.

இது குறித்து பேசிய மாறன், நேரடியாக எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. படத்தை திரையிட திரையரங்குகள் ஆர்வமாக உள்ளன. என்றார். இந்நிலையில், டிசம்பர் 3 வெளியாவதாக இருந்த படம் டிசம்பர் 10-க்கு தள்ளிப் போனதால் டிசம்பர் 10 படம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கன மழை காரணமாகவே படம் தள்ளி வைக்கப்பட்டது. டிசம்பர் 10 படம் வெளியாக எந்தத் தடையும் இல்லை. படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகியிருப்பதே அதற்குச் சான்று என்றார்.

ஆன்டி இண்டியன் பட உரிமையை வாங்கியிருப்பவர்கள் ஏரியாவாரியாக...

சென்னை சிட்டி - பிவிஆர் சினிமாஸ்

செங்கல்பட்டு - தனம் பிக்சர்ஸ்

கோயம்புத்தூர் - கந்தசாமி ஆர்ட்ஸ்

வட மற்றும் தென் ஆற்காடு - எஸ் பிக்சர்ஸ்

மதுரை - எஸ்ஆர்எஸ் மூவிஸ்

திருச்சி - காமதேனு மூவிஸ்

சேலம் - விகே கம்பைன்ஸ்

திருநெல்வேலி, கன்னியாகுமரி - வசுந்தராதேவி பிலிம்

அனைத்து ஏரியாக்களும் விற்பனையான நிலையில் திரையரங்குகள் படத்தை திரையிட மறுக்கின்றன, படம் டிசம்பர் 10 வெளிவருமா என்பதெல்லாம் அடிப்படையில்லாத கேள்விகள். டிசம்பர் 10 ஆன்டி இண்டியனை ரசிகர்கள் திரையில் கண்டுகளிக்கலாம்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Tamil Cinema