ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''நல்ல படத்துக்கு அதுவே விளம்பரம்..'' துணிவு பட புரொமொஷன் குறித்து அஜித் சொன்ன விஷயம்!

''நல்ல படத்துக்கு அதுவே விளம்பரம்..'' துணிவு பட புரொமொஷன் குறித்து அஜித் சொன்ன விஷயம்!

அஜித்

அஜித்

பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படமும் வெளியாகவிருப்பதால், துணிவு புரொமோஷன் தீப்பொறியாக இருக்க வேண்டும் என படக்குழுவினர் விரும்பியுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  துணிவு படத்தின் புரொமோஷனுக்கு அஜித் வர வாய்ப்புள்ளதாக இன்று தகவல்கள் பரவிய நிலையில் அதுகுறித்து அஜித்தே பாசிடிவான பதில் அளித்துள்ளார்.

  அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி தொடர்ந்து 3ஆவது முறையாக இணைந்து துணிவு படத்தை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இடம்பெற்றுள்ளார். சமுத்திரக்கனி, ஆதி, ஆமிர், பாவ்னி, சிபிச்சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர்.

  எச். வினோத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசையமைக்க, வலிமை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா காட்சிகளை படமாக்கியுள்ளார்.

  ஹெ.வினோத்துடன் கைகோர்க்கும் கமல் ஹாசன்?

  தற்போது போஸ்ட் புரொடக்சனில் ஒரு பகுதியாக டப்பிங் வேலைகள் முழுவீச்சில், வினோத்தின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து புரொமோஷன் பணிகளை துணிவு படக்குழுவினர் ஆரம்பிக்க உள்ளனர்.

  இந்த பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படமும் வெளியாகவிருப்பதால், துணிவு புரொமோஷன் தீப்பொறியாக இருக்க வேண்டும் என படக்குழுவினர் விரும்பியுள்ளனர். இதனால், 10 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்தை புரொமோஷனில் ஈடுபட செய்யலாமா என்ற ஆலோசனையில் படக்குழுவினர் இருந்துள்ளது.

  இதுபற்றி அஜித்திடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். ஆனால் அவரிடம் இருந்து வந்த பதில் வேறுவிதமாக உள்ளது.

  பிக்பாஸ் போட்டியாளர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்.. நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு!

  ‘ஒரு நல்ல படம் அதற்கான விளம்பரத்தை அதுவே தேடிக் கொள்ளும்’  என்று அஜித் பதில் அளித்துள்ளதாக, அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் புரொமோஷனுக்கு அஜித் வர மாட்டார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதற்கு முன்பு வெளிவந்த அஜித்தின் வலிமை, நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் படங்களுக்கும் பெரிய அளவில் புரொமோஷன் நடக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதனால் துணிவு படத்திற்கு இயக்குனர் எச்.வினோத், நடிகை மஞ்சு வாரியர்தான் புரொமோஷன் பணிகளை முன்னின்று நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

  அசல் படத்தின் புரொமோஷனின் போது ரஜினியுடன் அஜித.

  10 ஆண்டுகளுக்கு முன்பாக அசல் படத்தின் புரொமோஷனில் அஜித் பங்கேற்றிருந்தார். அதன்பின்னர் எந்த படத்திற்கு அவர் விளம்பரம் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Ajith, Kollywood