Home /News /entertainment /

நிச்சயதார்த்தம் நடந்து இரண்டரை ஆண்டுகள்... விஜயகாந்த் மகனின் திருமணம் ஏன் இன்னும் நடக்கவில்லை?

நிச்சயதார்த்தம் நடந்து இரண்டரை ஆண்டுகள்... விஜயகாந்த் மகனின் திருமணம் ஏன் இன்னும் நடக்கவில்லை?

விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம்

விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம்

திருமணத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வைக்க வேண்டும் என்று விஜயகாந்த் விரும்புவதாகவும், அவரது தேதிக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்த நிலையில், இன்னும் திருமண நடக்காததற்கான காரணம் வெளியாகியுள்ளது.

    நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜயகாந்த் 1990-ஆம் ஆண்டு பிரேமலதாவை மணந்தார். இவர்களுக்கு விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இளையவரான சண்முகபாண்டியன் தனது தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்துள்ளார்.

    விஜயபிரபாகரன் இப்போது தாயார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாமா எல்.கே.சுதீஷ் ஆகியோரை பின்பற்றி தேமுதிக-வில் செயல்பட்டு வருகிறார். 2019 டிசம்பரில் விஜயபிரபாகரனுக்கும், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவனின் மகள் கீர்த்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்துக் கொண்டனர்.



    முதல்வரை நேர்ல பாத்துட்டேன்... செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்வில் பாடியது குறித்து கிடாக்குழி மாரியம்மாள்!

    ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் அவர்கள் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தான் இந்த தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு திருமணத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வைக்க வேண்டும் என்று விஜயகாந்த் விரும்புவதாகவும், அவரது தேதிக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்குள் திருமணம் நடக்கும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக கேப்டன் குடும்பத்திடம் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விஜயகாந்த் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் அவர் அரசியலில் நடக்கும் நிகழ்வுகளைப் பின்தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அது குறித்த வலுவான கருத்துக்களை தெரியப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema, Vijayakanth

    அடுத்த செய்தி