Home /News /entertainment /

ஆமிர்கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா விளக்கம்

ஆமிர்கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா விளக்கம்

ஆமிர் கான் - விஜய் சேதுபதி

ஆமிர் கான் - விஜய் சேதுபதி

லால் சிங் சத்தா திரைப்படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியிருக்கிறது.

    ஆமிர்கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது குறித்து அவருக்கு பதிலாக படத்தில் இடம்பெற்ற நடிகர் நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார்.

    1994-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான ஃபாரெஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகிறது. இதில் அமீர் கானுடன் இணைந்து, கரீனா கபூர் கான், மோனா சிங் மற்றும் நாக சைதன்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த தகவல் வெளியான சில நாட்களிலேயே படத்திலிருந்து வெளியேறி விட்டார். இதற்கு பதிலாக தெலுங்கு நட்சத்திரம் நாக சைதன்யா படத்தில் இடம்பெற்றார்.

    மாதவனின் ராக்கெட்ரி – நம்பி விளைவு படத்திற்கு சீமான் பாராட்டு…

    இந்நிலையில், விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகியது குறித்து நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார். அதாவது, மற்ற படங்களில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டியது இருந்ததால், போதுமான கால்ஷீட்டை அவரால் லால் சிங் சத்தா படத்திற்கு ஒதுக்க முடியவில்லை. இதனை தயாரிப்பாளர் தரப்பிடம் எடுத்துக் கூறி விட்டு படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினாராம்.

    கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட காஜல் அகர்வால்

    லால் சிங் சத்தா ரீமேக் செய்யப்பட்ட ஃபாரெஸ்ட் கம்ப் படத்திற்கு 6 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    லால் சிங் சத்தா திரைப்படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியிருக்கிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Aamir Khan, Actor Vijay Sethupathi

    அடுத்த செய்தி