நடிகர் விஜய் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு ஏன்? - உதயநிதி விளக்கம்!

நடிகர் விஜய் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு ஏன்? - உதயநிதி விளக்கம்!
மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய்
  • News18
  • Last Updated: September 5, 2019, 1:30 PM IST
  • Share this:
நடிகர் விஜய் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முரசொலி நிர்வாக இயக்குநர் முரசொலி செல்வத்தின் பேத்தி நிச்சயதார்த்த நிகழ்ச்சி தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார் நடிகர் விஜய். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோருடன் விஜய் இருக்கும் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகின.

இதையடுத்து முக.ஸ்டாலினும் - விஜயும் சந்தித்து பேசிக்கொண்டதாக செய்திகள் வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், “அ.தி.மு.கவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.இதைப் பார்த்து தி.மு.க கலங்கியுள்ளது. நடிகர் விஜய், தி.மு.கவுடன் சேர்ந்தால் தாராளமாக சேரட்டும். தி.மு.க தலைவர் விஜயை சந்தித்து பேசியதன் காரணமே அ.தி.மு.கவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளதை சரிசெய்வதற்காக இருக்கலாம்” என்றார்.

விஜய் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியலாக்கப்பட்டதை அடுத்து நடிகரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். அதில், “எங்களது குடும்ப விழாவுக்காக விஜய் வந்திருந்தார். அது ஒரு எதார்த்தமான சந்திப்பு தான். அதை அரசியலாக்குவது ஒரு அறியாமை தான்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: வலுக்கும் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற மோதல்!

Loading...

First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...